Published on 23/12/2020 | Edited on 23/12/2020

இந்தியாவின், 71 -ஆவது குடியரசுத் தின விழா வரும் ஜனவரி 26 ஆம் நாள் கொண்டாடப்பட இருக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு குடியரசுத் தின விழாவிலும், உலக நாடுகளின் தலைவர்கள், சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்பர்.
இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், வருகின்ற குடியரசுத் தின விழாவில் பங்கேற்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் போரிஸ் ஜான்சன், குடியரசுத் தின விழாவில் பங்கேற்கமாட்டார் எனத் தகவல் வெளியாகிவுள்ளது. புதிய வகை கரோனா வேகமாகப் பரவி வருவதால் போரிஸ் ஜான்சன், தனது இந்திய வருகையை ரத்து செய்துள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.