நம்பிக்கையில்லா தீர்மானம் மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான நேற்று நடந்தது. பாஜக மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் இறுதியில் தோல்வியில் முடிந்தது.
இது தொடர்பான விவாதம் காலையிலேயே தொடங்கியது. இந்த விவாதத்தில் பேச, ஒவ்வொரு கட்சியினருக்கும் முன்கூட்டியே நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதிகபட்சமாக ஆளும் பாஜகவுக்கு 3மணிநேரம் 33 நிமிடங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்த தெலுங்கு தேசம் கட்சிக்கு முதலில் 13 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து காங்கிரசுக்கு 38 நிமிடங்கள், அதிமுக.வுக்கு 29 நிமிடங்கள், திரிணாமுல் காங்கிரசுக்கு 27 நிமிடங்கள், பிஜு ஜனதா தளத்துக்கு 15 நிமிடங்கள், சிவசேனாவுக்கு 14 நிமிடங்கள், தெலங்கானா ராஷ்டரிய சமிதிக்கு 9 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட சிறிய கட்சிகளுக்கு மொத்தமாக 26 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன.