இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக அனில் சவுகானை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், இந்திய ராணுவ விவகாரத்துறைச் செயலாளராகவும் அனில் சவுகான் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 40 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணியாற்றி லெப்டினன்ட் ஜெனரலாக ஓய்வுப் பெற்றவர் சுனில் சவுகான். இந்திய ராணுவத்தின் கிழக்கு பிரிவுக்கு தளபதியாக இருந்த அனுபவம் கொண்டவர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தைத் தடுப்பதில் திறம்பட பணியாற்றிய அனுபவமிக்கவர். ராணுவத்தில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ள அனில் சவுகான், வட கிழக்கு இந்தியாவில் ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளித்தவர்.
முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் நீலகிரியில் கடந்தாண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், அப்பதவிக்கு அனில் சவுகானை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.