
பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் கங்கா கர்ஹாரியா நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், பள்ளி குளியலறையில் இருந்து சந்தேகத்திற்கிடமான சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்ட கிராம மக்கள், குளியலறையை திறந்து பார்த்துள்ளனர். அதில், ஆசிரியர் ஒருவரும், 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும் தகாத உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், ஆசிரியரைப் பிடித்து பஞ்சாயத்து கட்டிடத்திற்கு இழுத்துச் சென்றுள்ளனர். மேலும், அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அதன் பிறகு, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஆசிரியரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த ஆசிரியர் மாணவியை காதலித்து வந்ததாகவும், மாணவியின் குடும்பத்தினரிடம் திருமணத்தைப் பற்றி கூறியதாகவும் தெரியவந்துள்ளது.
மாணவியும், அவரது குடும்பத்தினரும் முறையான புகார் எதுவும் கொடுக்காததால், ஆசிரியர் மீது எந்தவித நடவடிக்கையும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், கல்வித்துறை சார்பில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.