Skip to main content

ரியல் 'மென் வெர்சஸ் வைல்ட்' - மூன்று நாட்களுக்கு பின்பு மூதாட்டி மீட்பு

Published on 11/02/2025 | Edited on 11/02/2025

 

Three days later the old lady's rescue

சேலத்தில்  வனப்பகுதியில் வழி தவறிச் சென்ற மூதாட்டி மூன்று நாட்களுக்கு மீட்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் அமைந்துள்ள குரும்பம்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு சின்ன ராசி என்ற மூதாட்டி ஒருவர் சென்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது வெளியே வரத் தெரியாமல் வழித்தவறி வனப் பகுதிக்குள் மூதாட்டி சென்று விட்டார். இதுகுறித்து பாட்டியின் உறவினர்கள் வனத்துறையினரிடம் புகார் அளித்தனர்.

தொடர்ந்து வனத்துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். சுமார் மூன்று நாட்களாக தேடுதல் நடத்தப்பட்டு வந்த நிலையில் காப்பு காட்டுப் பகுதியில் 3 நாட்களாக உணவு இல்லாமல் ஓடையிலிருந்த தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு மரத்தடியில் படுத்திருந்த மூதாட்டியை மீட்டனர். வனப்பகுதியில் வழி தவறிச் சென்ற மூதாட்டி மூன்று நாட்களுக்கு மீட்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்