Published on 11/02/2025 | Edited on 11/02/2025

புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அண்மையாகவே கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுஇடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல்கள் வெளியாவது வாடிக்கையாகி வருகிறது. அண்மையில் தமிழகத்தில் பல்வேறு தனியார்ப் பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்டு பின்னர் சோதனையில் புரளி என தெரிய வந்தது.
இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வெடிகுண்டு இருப்பதாக இமெயில் மூலம் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விட்டுள்ளார். மிரட்டலைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.