Published on 01/12/2018 | Edited on 01/12/2018

வரும் 7 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் ராஜஸ்தானின் பல்லோடியில் அமித் ஷா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய அவர், "நான் மங்களூருவிலிருந்து வந்துகொண்டிருந்த பொழுது ராகுல் காந்தியின் பிரச்சாரத்தை பார்த்தேன், அதில் அவர் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என கூறினார். இதை கேட்டதும் நான் இருப்பது இரவா? பகலா? என சோதித்தேன். ஏனென்றால் அது பகல் கனவு என உறுதிப்படுத்திக்கொள்ளவே அவ்வாறு செய்தேன்" என கூறினார்.