Skip to main content

சொந்த மாநில இளைஞர்களுக்கு வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு வரி விலக்கு

Published on 18/12/2018 | Edited on 18/12/2018

 

qwe

 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று நேற்று ஆட்சியமைத்தது காங்கிரஸ் கட்சி. முதல்வராக நேற்று பதவியேற்ற கமல்நாத், விவசாய கடன் தள்ளுபடி செய்வதற்கான கோப்பில் முதல் கையெழுத்து போட்டார். இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ' மத்திய பிரதேசத்துக்கு, உத்தரப் பிரதேசம் மற்றும் பிஹாரில் இருந்து  ஏராளமான தொழிலாளர்கள் வருகின்றனர். இங்குள்ள தொழில் நிறுவனங்களில் அவர்கள் அதிகஅளவில் பணிபுரிவதால் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலையில்லாத சூழல் ஏற்படுகிறது. எனவே மத்திய பிரதேசத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், உள்ளூர் இளைஞர்களுக்கு அதிகஅளவு வேலை வழங்க வேண்டும். உள்ளூர் இளைஞர்களுக்கு 70 சதவீத அளவுக்கு வேலை வழங்கும் தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்படும்’’ என கூறினார். இது பல்வேறு தரப்பிலும் ஆதரவையும், எதிர்ப்பையும் பெற்று வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்