Published on 07/03/2022 | Edited on 07/03/2022
மிக அபூர்வ விலங்கான பனி சிறுத்தையின் நடமாட்டத்தைப் பாதுகாப்பு படை வீரர்கள் பதிவு செய்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பனிச்சிறுத்தைக்கான அறிவியல் பெயர் பாந்தெரா யூனிகா. இந்த விலங்கு காடுகளில் காணப்படும் சாதாரண சிறுத்தையை விட சற்று சிறியதாக காணப்படும். பனி சிறுத்தைகள் மலைகளின் பூதம் என்றும் அழைக்கப்படுகிறது. பனி நிறைந்த பகுதியில் கல் இடுக்குகளில் வாழும் பனி சிறுத்தைகளின் நடமாட்டத்தைக் கண்டறிவது மிகவும் அரிது. இந்நிலையில் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள காஸா பகுதியில் 12,500 அடி உயரம் கொண்ட ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் பனி சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்ட இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் அதனை வீடியோ எடுத்துள்ளனர். அபூர்வ பனி சிறுத்தையின் அந்த வீடியோ இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.