பெங்களூருவில் உள்ள நாகவரா பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் மான்யதா தொழில்நுட்பப்பூங்கா அமைந்துள்ளது.
அங்கு 68 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த வளாகத்தில் நேற்று மாலை ராகுல் காந்தி பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ராகுலுடன் கலந்துரையாட குறைவான அளவிலுள்ள நபர்களுக்கே வாய்ப்பு வழங்கபட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த மற்ற ஊழியர்கள் ராகுல் வரும் போது "மீண்டும் மோடி வேண்டும் " என கூறி கோஷம் எழுப்பினர். அதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ள அமித்ஷா, "கருத்து சுதந்திரத்திற்கான சாம்பியன்கள் எங்கே போனார்கள்? எதிர்காலத்திற்கு வழிகாட்டும் இளைஞர்களை மிரட்டுவதை காங்கிரஸ் உடனடியாக கைவிட வேண்டும்" என கூறியுள்ளார்.