Skip to main content

40 சதவீத தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள்...திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு...

Published on 13/03/2019 | Edited on 13/03/2019

 

mamta

 

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கிய தேசியக் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் தங்கள் கூட்டணிகளை முடிவு செய்துள்ளன.

இந்நிலையில் 42 மக்களவை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. அதன்படி வேட்பாளர் பட்டியலில் 40 சதவீதம் தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த தேர்தலில் 35 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்தியது திரிணாமூல் காங்கிரஸ் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தேர்தலில் மூத்த நடிகை மூன்மூன் சென், நடிகர் தேவ் ஆகியோரும் அக்கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.    

 

 

சார்ந்த செய்திகள்