கேரளாவையே உலுக்கிய தங்கக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாகத் தேடப்பட்டு வந்த ஸ்வப்னா சுரேஷ், தமிழகம் வந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், நேற்று முன்தினம் பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.
என்.ஐ.ஏ போலீசார் அவரைக் கைது செய்த நிலையில் இன்று கொச்சியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா, சந்தீப் ஆகியோர் நீதிமன்றத்தில் தற்போது ஆஜர்படுத்தப்பட்டனர். பெங்களூரில் கைது செய்த இருவரையும் கொச்சி அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக இருவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆஜர் படுத்தப்பட்ட ஸ்வப்னா, சந்தீப் ஆகியோருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் ஸ்வப்னாவுக்கு கரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.