தெலுங்கானாவை பசுமையாக்கும் நோக்கத்தில் ஹரிதா ஹரம் என்ற திட்டத்தை அம்மாநில அரசு முன்னெடுத்தது.
இதைத்தொடர்ந்து வனப்பகுதிகளில் மரங்களை நட்டு பராமரிக்கவேண்டும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த வனத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று கொம்மரம் பீம் ஆசிபாபாத் மாவட்டத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தில் வனத்துறை அதிகாரியான அனிதா தலைமையில் மரம் நடும்விழா நடைபெற்றது.
அப்போது திடீரென அந்த தொகுதி எம்.எல்.ஏ.வும், டி.ஆர்.எஸ்.ஸின் (தெலுங்கு ராஷ்ட்ரிய சமிதி) பிரமுகருமான கோனேரு கண்ணப்பாவின் சகோதரர் கோனேரு கிருஷ்ணா தலைமையில் சிலர் கும்பலாக வந்து மூங்கில் கம்புகளால் அந்த அதிகாரியை கடுமையாக தாக்கினர்.
இதிலிருந்து தப்பிச்செல்ல அங்கிருந்த ட்ராக்டரில் ஏறினார். ஆனால் அந்த கும்பல் அவரை மீண்டும் கடுமையாக தாக்கியது. இதனால் அவர் மிகுந்த காயமுற்று நிலைக்குலைந்து விழுந்தார். தற்போது அந்த அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#WATCH Telangana: A police team & forest guards were attacked allegedly by Telangana Rashtra Samithi workers in Sirpur Kagaznagar block of Komaram Bheem Asifabad district, during a tree plantation drive. (29.06.2019) pic.twitter.com/pZ0H3Qg2Ud
— ANI (@ANI) June 30, 2019