Skip to main content

ஆதார் எண் அளிக்க மேலும் 3 மாத கால அவகாசம்: மத்திய அரசு

Published on 28/09/2017 | Edited on 28/09/2017
ஆதார் எண் அளிக்க மேலும் 3 மாத கால அவகாசம்: மத்திய அரசு

சமூக நல திட்டங்களுக்கு ஆதார் எண் அளிக்க மேலும் 3 மாத கால அவகாசம் அளித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு சமூக நல திட்டங்கள் மற்றும் மானியங்களை பெறுவதற்கு ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. 

இதுவரை ஆதாருக்கு பதிவு செய்யாதவர்கள், ஆதார் எண்ணை அளிப்பதற்கு செப்டம்பர் 30-ந் தேதிவரை கால அவகாசம் அளித்து இருந்தது. அந்த அவகாசம் இன்னும் 2 நாட்களில் முடிவடைய உள்ளது. இந்நிலையில், இந்த கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு, அதாவது டிசம்பர் 31-ந் தேதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்த உத்தரவை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

இந்த சலுகை, இதுவரை ஆதாருக்கு பதிவு செய்யாதவர்கள் மற்றும் ஆதார் எண் ஒதுக்கப்படாதவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அந்த அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது. இந்த 3 மாத காலத்தில், அவர்களுக்கு எந்த சலுகையும் நிறுத்தப்படாது என்றும் கூறியுள்ளது. அவர்கள் டிசம்பர் 31-ந் தேதிக்குள், ஆதாருக்கு பதிவு செய்வதுடன், ஆதார் எண்ணையோ அல்லது ஆதாருக்கு பதிவு செய்ததற்கான அடையாள எண்ணையோ சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

சார்ந்த செய்திகள்