Published on 18/01/2019 | Edited on 18/01/2019

இந்தியாவின் இளம் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு வருவதாக இஸ்ரோவின் தலைவர் சிவன் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் சுகன்யான் திட்டம் குறித்து விளக்கமளித்தார். மேலும் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் ஒரு மாநிலத்துக்கு 3 மாணவர்கள் வீதம் 36 மாணவர்களுக்கு இஸ்ரோ பயிற்சியளிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், 8ம் வகுப்பு தேறிய மாணவர்களுக்கு ராக்கெட் ஏவுதளத்தில் ஒரு மாதம் பயிற்சியளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.