Published on 25/12/2020 | Edited on 25/12/2020
![21 year old girl mayor for the first time in the country!](http://image.nakkheeran.in/cdn/farfuture/0YHGrEIuEH9mJd6jXL5NZqY4ej0s0z19MlwutNJGl_E/1608902011/sites/default/files/inline-images/try4456745.jpg)
நாட்டிலேயே முதல் முறையாக 21 வயது இளம்பெண் ஒருவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள முடவன்முகன் பகுதியைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரியான ஆர்யா ராஜேந்திரன் என்ற 21வயது இளம்பெண், கேரளாவில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.
அவர் வசித்து வந்த பகுதியின் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட அவர், வெற்றி பெற்றதோடு தற்பொழுது திருவனந்தபுரத்திற்கு மேயராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாட்டிலேயே முதன்முறையாக, மிகவும் இளம்பெண் ஒருவர், மாநகராட்சியின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலேயே மேயர் பதவியைப் பெற்ற அவருக்கு வாழ்த்துகள் குவிந்துவருகிறது.