Published on 04/06/2020 | Edited on 04/06/2020

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.