தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப்பணிகளை செய்து வரும் எஸ்.பி.கே. நிறுவனத்தின் உரிமையாளர் செய்யாதுரை மற்றும் அவரது உறவினர்களின் இடங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 30க்கும் மேற்பட்ட இடங்களில் 3 நாட்கள் நடந்த இந்த சோதனையில் 183கோடி ரூபாய் பணம், 103கிலோ தங்கக் கட்டிகள் ஆகியன கைப்பற்றப்பட்டன. பண்டல் பண்டல்களாக முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இதன் அடிப்படையில் செய்யாதுரையின் மகன் நாகராஜன், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ரவிச்சந்திரன், தொழிலதிபர் தீபக், துணை ஒப்பந்ததாரர் பூமிநாதன், சேத்துப்பட்டு ஜோஸ் உள்ளிட்ட 15 பேருக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் இன்று மாலைக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது.
இதையடுத்து இன்று மதியம் 2 மணிக்கு நாகராஜன் விசாரணைக்கு ஆஜர் ஆனார். அவரிடம் அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். 8.30 மணிக்கு அவர் விசாரணை முடிந்து வெளியே சென்றார்.