மின்வாரிய தொழிலாளர்கள் வேலை நிறுத்த முடிவை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர அன்போடு அழைக்கிறேன். தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு எப்போதும் தயாராக உள்ளது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர்,
மின்வாரிய தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் நாளை மின்தடை ஏற்படாது. வேலைநிறுத்தம் நடந்தால் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வேலைநிறுத்தம் காரணமாக இடையூறு ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். வேண்டுமென்றே சிலர் மின்வெட்டு ஏற்படுத்தினால் அரசிடம் மக்கள் புகார் அளிக்கலாம்.
வேலைநிறுத்தத்தை கைவிடுங்கள்:
7வது ஊதியக்குழுவுக்கு பிறகே பேச்சுவார்த்தையை தொடங்கினோம். தாமதமாக கருத முடியாது. 14 சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடமாட்டோம் என கூறியுள்ளனர். மின்வாரிய தொழிலாளர்கள் வேலை நிறுத்த முடிவை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர அன்போடு அழைக்கிறேன். தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு எப்போதும் தயாராக உள்ளது.
அரசின் பேச்சுவார்த்தையில் பங்கேற்காமலேயே சிஐடியு வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது. மின்வாரிய தொழிலாளர்கள் பணிச்சுமை இரண்டொரு நாளில் பேசி முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.