Skip to main content

பிரதமர் மோடி, அமித்ஷா அவசர ஆலோசனை...

Published on 07/05/2020 | Edited on 07/05/2020

 

pm holds a meeting on vizag gas leak

 

ஆந்திர விஷவாயுக் கசிவு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாயுடுதோட்டா அருகே ஆர்.ஆர்.வெங்கடப்புரத்தில் இயங்கி வரும் எல்.ஜி.பாலிமர்ஸ் (LG Polymers industry) இரசாயன ஆலையில் இன்று (07/05/2020) அதிகாலை விஷ வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. சுமார் 5 கி.மீ தொலைவுக்கு விஷ வாயு பரவியதால், அப்பகுதியில் சாலையில் சென்ற மக்கள் பலரும் மயங்கி கீழே விழுந்தனர். இந்த விஷவாயுக் கசிவால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7- ஆக உயர்ந்துள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை படையினர் விஷ வாயுவைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில் இந்தச் சம்பவத்தை அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றைப் பிரதமர் மோடி ஏற்பாடு செய்து ஆலோசனைகள் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்