Skip to main content

மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகாத முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்க்கு பிடிவாரண்ட்

Published on 27/11/2018 | Edited on 27/11/2018
court

 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ராஜேஸ். கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி துவரங்குறிச்சி அருகே நடந்த சாலை விபத்தில் சின்னக்காளை என்பவர் இறந்து விட்டார். இது சம்பந்தமாக அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை சேர்ந்த முருகேசன் மகன் முத்துவேல் என்பவர் மீது வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ராஜேஸ், மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தார். இது சம்பந்தமான விசாரணைக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் இன்ஸ்பெக்டர் ராஜேஸ் ஆஜராகாததால் மணப்பாறை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தர்ம பிரபு, பிடிவாரண்ட் பிறப்பித்தும், அவர் மீது குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். ராஜேஸ் தற்போது முத்துப்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கிணற்றில் விழுந்த காட்டெருமை; போராடி மீட்ட வனத்துறை!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
An aggressive bison fell into a well; The forest department fought and saved

திருச்சியில் வனத்தை ஒட்டியுள்ள பகுதியிலிருந்து விளைநிலப் பகுதிக்கு வந்த காட்டெருமை அங்கிருந்த நீர்ப்பாசனக் கிணற்றில் தவறி விழுந்த நிலையில் அதனை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ளது செம்மலைப் பகுதி. வனத்தை ஒட்டிய பகுதி என்பதால் அடிக்கடி காட்டு விலங்குகள் அந்தப் பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குப் படை எடுப்பது வழக்கம். இந்நிலையில் அந்தப் பகுதியில் உள்ள விவசாய கிணற்றிலிருந்து வினோத சத்தம் கேட்டதை தொடர்ந்து, அந்தப் பகுதி மக்கள் எட்டிப் பார்த்தனர். உள்ளே காட்டெருமை ஒன்று தவறி கிணற்றில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது.

உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அதை மீட்க முயன்றனர். ஆனால் காட்டெருமை மிகவும் ஆக்ரோசமாக இருந்ததால் மயக்க மருந்து செலுத்தி அதனை வெளியே கொண்டு வர வனத்துறையினர் திட்டமிட்டனர். அதன்படி காட்டெருமைக்கு மயக்க ஊசி துப்பாக்கி மூலம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டு கயிறு கட்டி காட்டெருமை பத்திரமாக மீட்கப்பட்டது. மேலே கொண்டுவரப்பட்ட காட்டெருமைக்கு மீண்டும் மயக்கத் தன்மையைப் போக்க வைக்கும் ஊசி செலுத்தப்பட்ட நிலையில் மயக்கம் தெளிந்து  மீண்டும் வனப்பகுதிக்கு சென்றது.

Next Story

இளம்பெண் தற்கொலை; நடவடிக்கை எடுக்காத போலீசை கண்டித்து போராட்டம்

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
young woman lost their life near Manapparai

மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷாலினி(23). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மணப்பாறைப்பட்டியில் உள்ள திரையரங்கில் வேலை செய்தபோது, உடன் பணியாற்றிய ஜெபஸ்தியார்பட்டி நவீன்குமார்(22) என்பவரைக் காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. நவீன்குமாருக்கு மதுப்பழக்கம் இருப்பதால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் ஹரிஷாலினி நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஹரிஷாலினியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மாலை நேரம் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள், விசிக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ஆற்றலரசு, நகர செயலாளர் வடிவேல் ஆகியோர் தலைமையில் மணப்பாறை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முடங்கியது.

பின்னர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர்கள் ஜெ.கே.கோபி, பிரபு ஆகியோர் உறவினர்களிடம் சமரசம் பேசி, கணவர் வீட்டினரிடமிருந்து குழந்தையைப் பெற்று பெண் வீட்டாரிடம் ஒப்படைத்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. ஹரிஷாலினி உயிரிழப்பு குறித்து வையம்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.