Published on 16/04/2020 | Edited on 16/04/2020
சீனாவின் காங்ச்சோவிலிருந்து சுமார் 6.50 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளுடன் சரக்கு விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளது. இந்த சரக்கு விமானம் இன்று மாலை இந்தியா வரவுள்ளது. தென்கொரியா அனுப்பிய ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை அமெரிக்கா எடுத்துக் கொண்ட நிலையில் கிட் இந்தியா வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா பரிசோதனையை விரைவாக செய்வதற்காக ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் வந்த பிறகு மாநிலங்களுக்கு அவை பிரித்துக்கொடுக்கப்படும். குறிப்பாக கரோனாவால் அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களான மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை மத்திய அரசு உடனடியாக விமானம் மூலம் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.