கட்சியின் கொடியை உற்று நோக்கினால் புதிய தென்னிந்தியாவின் வரைபடம் தெரியும். 6 கைகள் 6 மாநிலங்களை குறிக்கும், நடுவில் உள்ள நட்சத்திரம் மக்களைக் குறிக்கும்.
நீங்கள் இடதுசாரியா, வலதுசாரியா என்கிறார்கள், அதனால் தான் மய்யம் என பெயர் வைத்தோம். மக்களையும், நீதியையும் மையமாக கொண்டது மக்கள் நீதி மய்யம். தராசின் நடுமுள் நாம், எந்த பக்கமும் சாயமாட்டோம்.
எல்லா தரப்பினருக்கும் தரமான கல்வி போய்ச் சேர வேண்டும். சாதி, மதம் அறவே நீக்கப்பட வேண்டும்; ஊழலை குறைத்தால் மின்சாரம் வரும். சாதியும், மதத்தையும் சொல்லி விளையாண்ட விளையாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும்.
எல்லா நல்ல முதல்வர்களுக்கும் இருக்கும் கொள்கைதான் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும். தத்தெடுக்கும் 8 கிராமங்களில் அனைத்தையும் செய்து காட்டுவோம், தவறு இருந்தால் திருத்திக்கொள்வோம்.
8கிராமங்களை தத்தெடுப்பதை கிண்டல் செய்கிறார்கள், நாங்கள் விஞ்ஞானிகள் அல்ல சமூக சேவகர்கள். சமூக சேவர்களாக வந்துள்ளோம், செய்ய வேண்டியதை செய்தாலே போதுமானது. உங்கள் எல்லாப் பற்றாக்குறையும் பேராசையால் வந்தது. நல்ல கட்சிக்கு வாக்களித்திருந்தீர்கள் என்றால் ஆண்டுக்கு ரூ.6000 இல்லை. ரூ.6 லட்சம் கிடைத்திருக்கும்.
கர்நாடகாவில் இருந்து தண்ணீர் மட்டுமல்ல ரத்தத்தையும் என்னால் வாங்கித் தரமுடியும். ரத்தத்தை வாங்கித் தர முடியும் என்றால் வன்முறை அல்ல, ரத்த தானம். அடுத்த தலைமுறைக்கான விதையை போடவே வந்துள்ளேன். என்னுடன் முடியும் கட்சி அல்ல இது, குறைந்தது மூன்று நான்கு தலைமுறைகளுக்கு தாக்கு பிடிக்கும். எனது எஞ்சிய வாழ்க்கை இனி உங்களுக்காகவே, அதற்காகவே இந்த அவசரம் என அவர் கூறியுள்ளார்.