ஜிசாட் - 6A செயற்கைக்கோளை ஏந்திக்கொண்டு ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட்-டவுன் நேற்று மதியம் 1.56 முதல் தொடங்கியது. இன்று மாலை 4.56 மணிக்கு ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
#FLASH: ISRO launches GSLV-F08 carrying the GSAT6A communication satellite from AP's Sriharikota. pic.twitter.com/sTmkDyS6Bi
— ANI (@ANI) March 29, 2018
ஜி.எஸ்.எல்.வி. - எப் 8 ராக்கெட் 415.6 டன் எடைகொண்டது. அதன் உயரம் 49.1 மீட்டர். இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட 17ஆவது நிமிடத்தில் ஜிசாட் - 6A செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்படும். இந்த ராக்கெட்டைப் பொருத்தவரை அதன் இரண்டாம் நிலையில் உயர் உந்துதல் திரவ எரிபொருளும், எலெக்ட்ரோ-ஹைட்ராலிக் ஆக்ஷன் சிஸ்டத்திற்கு பதிலாக எலெக்ட்ரோ-மெக்கானிக்கல் ஆக்ஷன் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டிருப்பது இரண்டு பிரதான மாற்றங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிசாட் - 6A செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இந்த காலகட்டத்தில் S-பேண்ட் தகவல் தொலைத்தொடர்புக்காக ஜிசாட் - 6A செயற்கைக்கோள் செயல்படும்.
தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சிவன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மேலாளராக பொறுப்பேற்ற பின் ஏவப்படும் முதல் செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.