
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தில் மணி ஆற்றில் மணல் கடத்துவதாக சங்கராபுரம் போலீசருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சங்கராபுரம் உதவி ஆய்வாளர் பிரபு மற்றும் தனிப்பிரிவு காவலர் இளந்திரியன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்றனர். அப்போது, சுமார் 5 மணியளவில் சோழ்ம்பட்டு கூட்டு ரோடு சாலையில் சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக மணல் கடத்தி வந்த இரண்டு ஈச்சர் வாகனங்களை சுற்றி வளைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மணல் அள்ளப் பயன்படுத்திய இரண்டு ஈச்சர் வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆரோக்கியராஜ் மகன் ஆரோக்கியசாமி, ஆரோக்கியதாஸ் மகன் ஜான் டேவிட், ஆனந்தன் மகன் சந்தோஷ்குமார், ஆனந்த மகன் பிரகாஷ் மற்றும் சின்னதுரை மகன் சதீஷ் ஆகிய 5 பேர் தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதன்பிறகு 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.