கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நேற்றிரவு (12/05/2020) 08.00 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி பிரதமர் நரேந்திர மோடி, "கரோனாவைச் சுற்றியே வாழ்க்கையை வைத்திருக்க முடியாது என்பதால், புதிய வடிவில் 4 ஆம் முழு முடக்கம் இருக்கும் என்றும், ரூபாய் 20 லட்சம் கோடிக்கு பொருளாதாரச் சிறப்புத் திட்டங்களையும் அறிவித்தார். மேலும் சிறப்புப் பொருளாதார தொகுப்பு குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார்" என்றார்.
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார மேம்பாட்டுக்கான அறிவிப்பை இன்று மாலை வெளியிடுகிறார். டெல்லியில் இன்று (13/05/2020) மாலை 04.00 மணிக்குச் செய்தியாளர்களைச் சந்திக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான பொருளாதார மேம்பாட்டு திட்ட அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
இந்த அறிவிப்பில் சிறுகுறு தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் நலன் காக்கும் திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.