
மறைந்த திமுக தலைமை தணிக்கை குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான துரை.கிருஷ்ணமூர்த்தியின் 24-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி ஊர்வலம் சிதம்பரத்தில் நடைபெற்றது.
ஊர்வலம், கீழ ரத வீதியிலிருந்து மறைந்த துரை.கிருஷ்ணமூர்த்தி உருவப்படத்தை கையில் ஏந்தியபடி, முன்னாள் எம்.எல்.ஏ.வும், திமுக மாநில பொறியாளர் அணி தலைவர் துரை. கி.சரவணன் தலைமையில் நடைபெற்றது . இந்த ஊர்வலம் சிதம்பரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கீழரதவீதியை அடைந்தது. ஊர்வலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மருதூர் ராமலிங்கம், டாக்டர் துரை. குமரகுரு, புவனகிரி (மேற்கு) திமுக ஒன்றியச் செயலாளர் மதியழகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் கீரப்பாளையம் வீரமணி, புவனகிரி பேரூராட்சி தலைவர் கந்தன், மாவட்ட மகளிரணி அமுதாராணி தனசேகரன், அம்பலவாணன், மெடிக்கல் சுரேஷ், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், நகர்மன்ற உறுப்பினர் சி.க.ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.