Skip to main content

புதுக்கோட்டையில் ஒரு லட்சம் பேர் கூடும் போட்டி கூட்டம். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவேசம்

Published on 18/09/2018 | Edited on 18/09/2018

 

vck


 புதுக்கோட்டை திலகர் திடலில் அதிமுக சார்பில் நாட்டுப்புற கலைஞர்களான செந்தில்கணேஷ் ராஜலெட்சுமி தம்பதிகளுக்கு பாராட்டு விழாவும் மற்ற நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா மற்றும் கலைத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கன மழை காரணமாக கலை விழா  நிறுத்தப்பட்டு திங்கள் கிழமை மாலை நடைபெற்றது. இந்த விழாவுக்காண அனைத்தையும் ஏற்றுக் கொண்டு  கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நலிந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கி பேசினார். 

 

 நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் புதுக்கோட்டையில் கலைத்திருவிழா நடத்தப்பட்டு நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவித்தொகையும் சிதிக்கும் கலைஞர்களுக்கு பாராட்டும் வழங்கப்படும். தமிழர்களின் பாரம்பரியமான நாட்டுப்புற கலைகளும், ஜல்லிக்கட்டு போட்டிகளும் எக்காலத்திலும் அழியாது. நான் கோட்டைக்கு போனால் அமைச்சர், மருத்துவமனைக்கு போனால் மருத்துவர், ஜல்லிக்கட்டு போட்டிகள் என்றால் வேட்டியை மடித்துகட்டிக்கொண்டு களத்தில் இறங்கி நிற்பேன்.

 

 இது அரசியல் பேசும் மேடை அல்ல  அதற்கு தனி மேடையில் கச்சேரி வைத்துள்ளோம். சில நாட்களுக்கு முன்பைு தன்னை வசைப்பாடியவர்களின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்ற ஒரே வாரத்தில் புதுக்கோட்டையில் போட்டிக் கூட்டம் நடத்த உள்ளோம். அந்த கூட்டத்தில்  ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள்  அந்த கூட்டத்தில் தான் பலரின் சுயரூபத்தை தோலுரித்து காட்டுவோம் என்று சில நாட்களுக்கு முன்பு தன்னை விமர்சனம் செய்ததுடன் தன்னை சந்தித்தார் விஜயபாஸ்கர் என்று மேடையில் பேசிய  தினகரனுக்கு அமைச்சர்  விஜயபாஸ்கர் சவால் விடுவது போல பேசினார்.


இந்த போட்டி பொதுக்கூட்டத்தில் முதல்வர் இபிஎஸ் அல்லது துணை முதல்வர் ஒ பிஎஸ் கலந்து கொண்டு பேச வைக்க அமைச்சர் முடிவெடுத்துள்ளார் என்றனர் ர ர க்கள்.

 

சார்ந்த செய்திகள்