Skip to main content

நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் ஐ. பெரியசாமி; கிராம மக்கள் நன்றி! 

Published on 09/03/2025 | Edited on 09/03/2025

 

Minister I Periyasamy fulfilled a long standing request villagers thank him

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்தில் புதிய ஊராட்சியாக வண்ணம்பட்டி ஊராட்சி உதயமாகிறது. வண்ணம்பட்டி, வெள்ளை மாலைப்பட்டி கிராம மக்கள் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு பாராட்டு தெரிவித்தனர். அதோடு 1971ஆம் ஆண்டு முதல் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு கிராம மக்கள் மனதார பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்தில் ஆத்தூர், செட்டியபட்டி, வக்கம்பட்டி, வீரக்கல், காந்திகிராமம், அம்பாத்துரை, மணலூர், சித்தரேவு, பித்தளைப்பட்டி, பஞ்சம்பட்டி உட்பட 22 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் எஸ். பாறைப்பட்டி ஊராட்சியில் பாறைப்பட்டி, கெண்டையம்பட்டி, கெப்பு சோலைப்பட்டி, ராமநாதபுரம், வண்ணம்பட்டி, உட்பட 5க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் வண்ணம்பட்டியை சேர்ந்த கிராம தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் ஊர் அருகே உள்ள வெள்ளைமாலைப்பட்டி கிராமம், எஸ். பாறைப்பட்டி கிராம ஊராட்சிக்கும் வீரக்கல் ஊராட்சிக்கும் இடையே உள்ளது. இவற்றை வண்ணம்பட்டி கிராமத்துடன் ஒன்றிணைத்து வண்ணம்பட்டியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களை ஊர் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதோடு வேண்டுகோளும் விடுத்தனர்.

இதனையடுத்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னாள் ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து வண்ணம்பட்டியுடன் வெள்ளைமாலைப்பட்டி மற்றும் வீரக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் காலனியையும் இணைத்து வண்ணம்பட்டி தனி ஊராட்சியாக அறிவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இச்செய்தியை கேள்விபட்டவுடன் வண்ணம்பட்டி மட்டுமின்றி வெள்ளை மாலைப்பட்டி மற்றும் அருந்ததியினர் காலனி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இது சம்மந்தமாக ஊர் முக்கிய பிரமுகர்களான சஷ்டி அண்ணாமலை, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் யூஜின் ராஜா, பிரேம்குமார், சஞ்சீவி, ஆர்.நடராஜன், பி.ராஜா, பெருமாள், பிரதீப், ராமலிங்கம், சுந்தரம்பிள்ளை, வேல்முருகன் உட்பட கிராமமக்கள் அனை வரும் அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு மனதார பாராட்டும், நன்றியும் தெரிவித்ததோடு தனி ஊராட்சி சம்மந்தமான கோரிக்கையை முன்னெடுத்து சென்ற முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினரும், ஆத்தூர் மேற்கு ஒன்றிய திமுக அவைத் தலைவருமான காணிக்கை சாமி அவர்களை பாராட்டி யுள்ளனர்.

இது குறித்து வண்ணம்பட்டி அருகே உள்ள வெள்ளைமாலைப்பட்டி கிராம மக்கள் கூறுகையில், “குடிதண்ணீர் பிரச்சனை, மின் சப்ளை பிரச்சனை, பள்ளிக்கு சுற்றுச் சூழல் உட்பட இதர பிரச்சனைகளுக்கு நாங்கள் எஸ்.பாறைப்பட்டி அல்லது வீரக்கல் ஊராட்சிக்கு சென்று  சொல்ல வேண்டிய நிலைமை இருந்தது. இப்போது அப்படி இல்லை எங்கள் கிராமம் அருகே உள்ள வண்ணம்பட்டி தனி ஊராட்சியாக மாறும் போது எங்களுக்கு எவ்வித சிரமமும் இல்லை” என்றனர். இதற்காக நடவடிக்கை எடுத்த ஊரக அமைச்சர் ஐ. பெரியசாமியை என்றும் மறக்க மாட்டோம் என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்