Published on 04/10/2018 | Edited on 04/10/2018
![](http://image.nakkheeran.in/cdn/farfuture/NcNPrV6IyDWx10nGrumga-2EDc0C2mW0hoim9xtDFqM/1537027864/sites/default/files/inline-images/thangatamilselvan1.jpg)
பழனிசாமி ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக பன்னீர்செல்வம், டிடிவி தினகரனின் நண்பரிடம் தினகரனை சந்திக்க நேரம் கேட்டார், சென்ற ஆண்டு அதாவது 2017 ஜூலை 12ம் தேதி கோட்டூர்புரம் பில்டர் இல்லத்தில் தினகரனை சந்தித்து பேசினார் பன்னீர்செல்வம். அப்போது அவர் பழனிசாமியை ஆட்சியிலிருந்து இறக்கிவிட்டு ஆட்சியை மாற்றுவோம் என கூறியதாக தங்க. தமிழ்செல்வன் தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தின்போது கூறியுள்ளார். மேலும் அவர் ஆதாரம் உள்ளது என்றும் கூறியுள்ளார். தேர்தல் நெருங்கவிருக்கும் இந்நிலையில் இவ்வாறு கூறியிருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தேர்தல் நேரத்தில் கவனத்தை ஈர்க்கவே இப்படி பேசுகிறார் என்றும், அவர் உண்மையைதான் பேசுகிறார் எனவும், ஒருவேளை உண்மையாக இருக்கலாம் என்றும் மாறுபட்ட கருத்துகளை அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.