Skip to main content

ஆட்சியை தக்கவைக்க அதிமுக போட்ட அதிரடி ஸ்கெட்ச்...

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

சட்டமன்ற உறுப்பினர்கள் 234 பேரில், தற்போது 212 பேர் இருக்கின்றனர். 22 தொகுதிகள் காலியாக உள்ளது. இந்த 212ல், அதிமுக கூட்டணியில் 114 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர்.

 

admk


திமுக கூட்டணியில் 97 பேர் இருக்கின்றனர். தேர்தல் முடிவிற்கு பின்னும் அதிமுக ஆட்சி தொடரவேண்டுமெனில், அவர்கள் 118 இடங்கள் பெறவேண்டும் அதாவது 4 இடங்கள் வெல்லவேண்டும். ஆனால் இந்த 4 இடங்களும் போதாது. 
 

ஏனெனில், கூட்டணியில் இருக்கும் தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் அதிமுகவிற்கு எதிரான மனநிலையில் உள்ளனர். அதேநேரம் அதிமுகவிற்குள்ளேயே இருக்கும் கலைச்செல்வன்(விருதாச்சலம்), ரத்தினசபாபதி(அறந்தாங்கி), பிரபு(கள்ளக்குறிச்சி) ஆகிய எம்.எல்.ஏ.க்கள் வெளிப்படையாகவே தினகரனை ஆதரிக்கின்றனர். ஒருவேளை இவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவளிக்கவில்லையென்றால் அதிமுகவின் எண்ணிக்கை 109 ஆக குறைந்துவிடும். இதனால்தான் 9 தொகுதிகளில் வெற்றி தேவை என்ற நிலையில் இருந்தது.
 

தற்போது, கலைச்செல்வன்(விருதாச்சலம்), ரத்தினசபாபதி(அறந்தாங்கி), பிரபு(கள்ளக்குறிச்சி) ஆகிய எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யுமாறு கோரியுள்ளனர். இதன்மூலம் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 231 ஆக குறையும். அப்படியானால் அதன் பெரும்பான்மை அளவு தற்போது 116 இருந்தாலே போதும். தற்போது அதிமுகவிற்கு தேவையானது 8 உறுப்பினர்கள் மட்டுமே. 
 

தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றும் வாய்ப்பு குறைவு மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஒருவேளை இந்த மூவரும் ஆதரவளிக்காமல் விட்டுவிட்டால் எதிர்மறையாகிவிடும் என்ற அச்சம். இதனால்தான் இவர்களை முன்னரே தகுதிநீக்கம் செய்ய முடிவெடுத்திருக்கின்றனர்.