Skip to main content

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கிய திட்டங்களா..! உண்மைத்தன்மை என்ன?

Published on 09/02/2025 | Edited on 09/02/2025

 

There are no major projects for Tamil Nadu in the Union Budget

மத்திய பட்ஜெட்டில் தமிழ் நாட்டுக்கு நிதி ஒதுக்கப்பட்ட சில முக்கிய திட்டங்கள்  என்று பாஜகவினர் சில திட்டங்களைக் குறிப்பிட்டு சில  பதிவுகளை  பகிர்ந்து  வருகின்றனர்   இது குறித்து விசாரித்ததில் பாஜகவினர் பதிவுகள் மிக அபத்தமாகவும் பொய்யாகவும் இருப்பதை அறிய முடிந்தது. 

பாஜகவினரின் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள 24 திட்டங்கள்,  வெளிநாட்டுக் கடனுதவியுடன் நடைபெறும் மாநில அரசுத்  திட்டங்களாகும்.இவை ஒன்றிய பட்ஜெட்டில் ‘Major Externally Aided Projects - State Sector Plan’ என்ற பட்டியலில் உள்ளவை. 

இத்திட்டங்களுக்கான நிதியின் பெரும்பகுதியை உலக வங்கி போன்ற  வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து கடனாக மாநில அரசு பெறுகிறது. அத்திட்டங்களுக்கு மாநில அரசும் நிதி ஒதுக்குகின்றது. வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து கடன் பெறுவதற்கு மத்திய அரசு,  இணைப்பாகச் செயல்படுகிறதே தவிர, இதற்கென்று தனியாக எந்த நிதியும் ஒதுக்கவில்லை.

மேலும்,  பாஜகவினரின் அந்தப் பதிவில்,‘Tamilnadu Climate Resilience Reconstruction Project’ என்கிற ஒரு திட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் அப்படி  ஒரு  திட்டமே  இல்லை. பட்ஜெட்டில் Green Energy Corridors III (GEC III)- Intra State Transmission System Tamil Nadu என்ற பெயரில் ஒரு திட்டம் உள்ளது. இதற்குப் பதிலாக அதனருகில் உள்ள Climate - Resilient Reconstruction after Flooding in Kerala, Phase II என்ற திட்டதைத் தவறுதலாக copy-paste செய்துள்ளனர். இவ்வாறு Tamil Nadu Industrial Connectivity Project மற்றும் Chennai Metro Rail Investment Project என்ற திட்டங்களைக் கூடச் சரிபார்க்காமல் Tamil Nadu Industrial Corridor Project, Chennai Metro Rail Industrial Project எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

பட்ஜெட்டில் Expenditure Profile (2025-2026) இல் இருந்து தமிழ்நாடு அல்லது சென்னை என்ற பெயரில்  உள்ள வெளிநாட்டு நிதியுதவி பெறும் மாநில அரசு திட்டங்களை எடுத்து அவை ஒன்றிய அரசு நிதி ஒதுக்கிய திட்டங்கள் என பொய்யான தகவலைப் பரப்புகின்றனர். Chennai metro phase 2 திட்டமும் மாநில அரசின் திட்டமாகத்  தொடங்கப்பட்டு, பின்னர் தொடர் கோரிக்கைகளின் மூலம் ஒன்றிய அரசின் உதவி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும்கூட, மாநில அரசு நிதி மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் கடன் போக ஒரு சிறு பகுதியைத் தான் ஒன்றிய அரசு வழங்குகிறது.  

பாஜக வெளியிட்ட பட்டியல் முழுக்க முழுக்க  பொய்களும் பிழைகளும் நிறைந்தவை.  மாநில அரசின் திட்டங்களையே தங்கள் திட்டங்கள் என்று குறிப்பிட்டு நிதி ஒதுக்கியிருப்பதாகப் பொய்யான பட்டியலை வெளியிட்டுள்ளனர் பாஜகவினர் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

சார்ந்த செய்திகள்