Skip to main content

“ஆவணி சொல்வதற்கு பதில் ஆவடி என்று சொல்வேன்”- சரண்யா பொன்வண்ணன் எக்ஸ்க்ளூசிவ்

Published on 07/03/2020 | Edited on 07/03/2020

தமிழ் சினிமாவில் 'நம்ம வீட்டுப் பிள்ளை'னு சிவகார்த்திகேயனை சொன்னா, 'நம்ம வீட்டு அம்மா'னு நடிகை சரண்யாவை சொல்லலாம். அந்த அளவுக்கு பல படங்களில் பல விதமான தமிழக அம்மாக்களை பிரதிபலித்து ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளவர் சரண்யா பொன்வண்ணன். அவரை சந்தித்து நெடுநேரம் உரையாடினோம். உரையாடலில் தான் நடித்த படங்கள் குறித்தும் தன் மகனான நடித்த நாயகர்கள் குறித்தும் பல சுவாரசியமான, நெகிழ்ச்சியான, மகிழ்ச்சியான விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதில் பாண்டி படம் மற்றும் களவாணி படத்தில் நடித்த தனது அனுபவம் குறித்து பேசிய பகுதி...
 

saranya ponvannan

 

 

“அந்த படம் என்றால் எனக்கு நியாபகம் வருவது, நான் செட்டிலேயே அனைவருக்கும் பிரியாணி சமைத்ததுதான். பிரியாணி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நாசர் சார் சொன்னார். அப்போது, நான் நல்லா சமைப்பேன் என்றேன். உடனே அவர், இப்படி சும்மாலாம் சொல்லக்கூடாது செஞ்சுக்கொடுக்கணும் என்றார். அதன்பின் ராசு மதுரவன் சார் புரொடக்‌ஷன் டீமை அழைத்து பிரியாணி செய்ய அவங்களுக்கு தேவையான சாமான்களை கொடுங்கள் என்றார். செட்டிலேயே கூரை அமைத்து பிரியாணி செய்தோம். நடித்துக்கொண்டே இடைவேளையில் ஆட்களை வைத்து பிரியாணி சமைத்தேன். மேலும் இன்னொரு விஷயம் என்றால் சினேகாவுடனான நட்பு, நாங்கள்  ‘அது’ என்றொரு படத்தில் ஒன்றாக நடித்திருந்தோம். ஆனால், அதைவிட இந்த படத்தில் இன்னும் நெருக்கமானோம். சினேகா ‘சின்க் சிஸ்டர்ஸ்’ என்று அவரையும் என்னையும் சேர்த்து சொல்வார். நாங்கள் இருவரும் சின்க் சிஸ்டர்ஸ்” என்று பாண்டி படத்தில் நடைபெற்ற அனுபவத்தை பகிர்ந்தார்.

“அந்த ஊரே ஒரு அழகு. சற்குணம், ஒரு அருமையான இயக்குனர். அந்த படத்தில் வரும் முக்கிய வசனமான தமிழ் மாதங்களை குறிப்பிட்டு சொல்லும் வசனம் எனக்கு முதலில் சொல்ல வரவே இல்லை. நான் அதில் ஆவணி என்பதற்கு பதிலாக ஆவடி என்றுதான் முதலில் சொல்லுவேன். ஒவ்வொரு முறை அதை சொல்லும்போது அப்படி சொல்லக்கூடாது என்று திருத்தி திருத்தி கடைசியில்தான் சரியாக சொன்னேன். ஒரு கட்டத்தில் என்னடா மாதம் இது, எப்போதுதான் எனக்கு சொல்ல வரும் என்றாகிவிட்டது. என்  இயக்குனரிடம் அதை ஆங்கில மாதமாக மட்டும் மாற்றுங்கள் எப்படி உடனடியாக வசனத்தை சொல்லுகிறேன் என்று பாருங்கள் என்று கிண்டலடிப்பேன். அவ்வளவு கஷ்டப்பட்டு சொன்ன வசனம்தான் எங்கு எந்த மேடை ஏறினாலும் சொல்லுங்கள் என்றளவிற்கு மாறியுள்ளது. இந்தப் படம் வாழ்நாள் கிரீடமாக இருக்கின்றது” என்று களவாணி படத்தில் நடைபெற்ற அனுபவத்தை பகிர்ந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்