பிரபல நடிகை திவ்ய பாரதிக்கு ஏற்பட்ட மரணம் குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.
திவ்ய பாரதி வாழ்க்கையில் நடந்த தடுமாற்றம், வளர்ச்சி, திருமணம் போன்றவற்றுடன் இறுதியாக திவ்ய பாரதி மும்பை வெர்சோவா என்ற பகுதியிலுள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பின் 5வது மாடியிலிருந்து தடுக்கி விழந்ததையும் முந்தைய தொடரில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாகப் பின்வருமாறு...
திவ்ய பாரதி தங்கியிருந்த அடிக்குமாடி குடியிருப்பின் கீழ் எப்போதுமே வரிசையாக கார்கள் நின்று கொண்டிருக்கும். ஆனால் திவ்ய பாரதி பால்கனியிலிருந்து தடுக்கி விழந்தபோது ஒரு கார் கூட அங்கு நிற்கவில்லை. இரவு 11.30 மணியளவில் தடுக்கி கீழே விழுந்ததால் யாருக்கும் தெரியாமல் இருந்திருக்கிறது. திவ்யபாரதியுடன் பேசிக்கொண்டிருந்த அமிர்த குமாரிக்கும் அங்குள்ள ஆடை வடிவமைப்பாளார் மற்றும் அவருடைய கணவர் சதீஸ்க்கும் இந்த விஷயம் தாமதமாக தெரிந்திருக்கிறது. அதன் பிறகு உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து இரத்த வெள்ளத்துடன் திவ்ய பாரதியை கூப்பர் மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துவிடுகின்றனர்.
அந்த மருத்துவமனையில் திருப்பாத்தி என்ற தலைமை மருத்துவர், திவ்ய பாரதிக்கு மருத்துவ பரிசோதனை செய்துவரும்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நடந்த விஷயத்தை திவ்ய பாரதியின் கணவர் சஜித் நதியாத்வாலாவுக்கு தெரிவிக்கின்றனர். மும்பையிலேயே இருந்த சஜித் நதியாத்வாலா தகவல் கிடைத்ததும் இரவு 2 மணிக்கு மருத்துவமனைக்கு வந்து மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அதன் பிறகு அதே மருத்துவமனையில் அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்ததாக ஒருபுறம் சிகிச்சையளித்து வந்தனர். அப்போது திவ்ய பாரதி மறைவு, செய்திகளாக வெளியான பின்னர் இந்தியாவே அதிர்ச்சிக்குள்ளானது.
அதைத்தொடர்ந்து திவ்ய பாரதி மறைவில் பல சந்தேகங்கள் மக்கள் மத்தியில் உருவானாது. பல நடிகைகளுக்கு போட்டியாக திவ்யபாரதி இருந்ததால் திட்டமிட்ட கொலையா? ஏன் சம்பவம் நடந்த இடத்தில் சஜித் நதியாத்வாலா இல்லை. சம்பவத்தின் பின்னணியில் திரையுலக மாஃபியா இருக்கிறது. என்று பலரும் திவ்ய பாரதியின் மறைவு குறித்து பேச ஆரம்பித்தனர். திவ்ய பாரதி மறைவு தொடர்பான வழக்கை வெர்சோவா பகுதி காவல்துறையினர் தொடர்ந்து 5 ஆண்டுகளாக விசாரணை நடத்தினர். ஆனால் திவ்யபாரதியின் மறைவில் சந்தேகப்படும்படியான எந்த துப்பும் கிடைக்கவில்லை. திவ்ய பாரதியின் உடலை உடற்கூறாய்வு செய்த மருத்துவர் திருப்பாத்தி, திவ்ய பாரதியின் உடலில் அதிகபடியான மோரிஸ் ரம் என்ற மது இருந்ததாக ரிப்போட்டில் தெரிவித்திருந்தார். இதனால் திவ்ய பாரதியின் மறைவு தொடர்பான வழக்கு இயற்கைக்கு மாறான மறைவு என்று நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.