குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.
ரம்யா என்ற பெண்ணுடைய வழக்கு இது. சென்னையைச் சேர்ந்த இவர், சாஸ்திர சம்பிரதாயத்தை நம்பக்கூடிய குடும்பத்தில் பிறந்தவர். வீட்டுக்கு ஒரே மகளான இவர், நன்றாகவே படித்து நல்ல இடத்தில் வேலை பார்த்துள்ளார். இவருக்கு மேட்ரிமோனி மூலம் ஒரு வரன் கிடைக்கிறது. பெங்களூரில் வேலை பார்க்கும் அந்த பையன், கோயமுத்தூரைச் சேர்ந்தவர். திருமணம் நிச்சயக்கப்பட்டு போதில் கூட, அந்த பையன் ரம்யாவிடம் அவளின் வீட்டின் விவரங்களையும், சம்பள விவரங்களை மட்டுமே கேட்கிறான். மேலும், வழக்கத்துக்கு மாறாக சில கேள்விகளை அவன் கேட்பதால் அவளுக்கு சந்தேகமாக இருக்கிறது. எளிமையாக மட்டுமே அணியும் பெண்ணின் ஆடையை பற்றி பையன் குறை கூறுகிறான். ரம்யா இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாமல் அவன் கூறும்படியான ஆடையை அணிகிறாள். திருமணத்திற்கு முன்பாகவே, சின்ன சின்ன விஷயத்திற்கு கூட பையன் வீட்டார், பெண் வீட்டாரிடம் லேசான சண்டை போடுகிறார்கள். இருப்பினும், திருமணத்திற்கான செல்வுகளை இருவீட்டார்களும் பகிர்ந்து இந்த திருமணத்தை நடத்தி முடிக்கிறார்கள்.
திருமணம் முடிந்த அன்று நடந்த முதலிரவில், எதிர்பார்ப்புகள் இல்லாமல் சோர்வாக இருந்ததால் இருவரும் தூங்கிவிட்டார்கள். நாட்கள் செல்ல செல்ல, அவர்கள் இருவருக்கும் இடையே அந்நியோன்யமே ஏற்படவில்லை. ஒரு 10 நாட்கள் கழித்து இருவரும் முடிவு செய்து ஹனிமூனுக்கு சிக்கிமுக்கு செல்கிறார்கள். பெரியோர்கள் யாரும் இல்லாததாலும், தனியாக இருப்பதாலும், ரம்யாவுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அங்கு சென்றவுடன், ரம்யாவுக்கு அவளது போன் பண்ணி விசாரித்ததால், மாப்பிள்ளை அவளோடு அன்று இரவு வரை சண்டை பிடிக்கிறான். மலைப் பிரேதசங்கள் மற்ற இடங்களுக்கு எல்லாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து செல்கிறார்கள். ஆனால், வெளியே சென்று அறைக்கு வந்தவுடன் ரம்யாவை தூங்கச் சொல்லிவிட்டு, ரிசப்சனில் உள்ள டிவியில் படம் பார்க்க வேண்டும் என்கிறான். இவளும் தனியாக அறையில் தனியாக படுத்திருப்பதால் பயம் வந்து, அவனோடு ரிசப்சனில் படம் பார்க்கிறாள். இதே மாதிரியாக ஒரு 5 நாட்களுமே நடந்துள்ளது. தன்னை பிடிக்கவில்லையா என்ற ரம்யா கேட்டாலும், உடனடியாக உன்னிடம் அந்த மாதிரி தோன்றவில்லை. அதுவும் சரிதான், இருவருக்குள்ளும் காதல் வந்தால் இந்த மாதிரியெல்லாம் நடக்கும் என்று ரம்யா கூறுகிறாள். அங்கிருந்து கிளம்பி உடனே கோயமுத்தூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு செல்கிறார்கள்.
அங்கு சென்றவுடன், ரம்யாவை பற்றியும், அவரது வீட்டை பற்றியும் மாமியார் குறை கூறி வாக்குவாதம் பிடிக்கிறார். அதன் பின்பு, பெங்களூருக்கு மகளையும் மாப்பிள்ளையும் அனுப்பி வைக்க பெண் வீட்டார் விருப்பப்பட, அதனை பையனுடைய அம்மா தடுத்துவிடுகிறார். ஆனால், கோயமுத்தூரில் விருந்து எல்லாம் முடித்த பிறகு, தம்பதியை பெங்களூரில் விட பையனுடைய மொத்த குடும்பமும் பெங்களூருக்கு செல்கிறார்கள். இது ரம்யாவுக்கு மிகப்பெரிய வருத்தத்தை தருகிறது. பெண்ணுடைய அப்பாவை பற்றி பையன் அடிக்கடி குறைக்கூறிக்கொண்டே இருக்கிறான். அதையெல்லாம் அவள் சகித்துக்கொண்டு பெங்களூரில் கணவன் மற்றும் அவனது குடும்பத்தோடு இருக்கிறாள். ஆனால், அங்கு போனதில் இருந்து அவர்களுக்குள் எந்தவித அந்நியோன்யமும் ஏற்படவில்லை. அவளை தனியறையில் படுக்க வைத்துவிட்டு இவன் தனது குடும்பத்தோடு பேசி மகிழ்கிறான். இரண்டு நாட்கள் கழித்து, பையனோடு குடும்பம் தங்கள் சொந்த ஊருக்கு சென்ற பிறகு இவர்கள் இருவர் மட்டுமே இருக்கிறார்கள். அவளுக்கு தனியறை கொடுத்துவிட்டு இவன் தனியறையில் இருக்கிறான். ரம்யா, கணவனோடு அறைக்கு சென்று கப்போர்டை தொட்டால் கூட, தனது பொருளை யாரும் தொடக்கூடாது என அவளோடு சண்டை போடுகிறான். கணவன் தனது குடும்பத்தோடு ஒன்றாக இருக்கிறான். இவள் மட்டும் தனியாக இருக்கிறாள். .
ஒரு 3 நாள், மனைவியை அவளது ஆபிஸிற்கு அழைத்துச் சென்று விட்டு, அடுத்த நாளில் இருந்து நீ தனியாக தான் ஆபிஸுக்கு போகவேண்டும் என்கிறான். பெங்களூருக்கு புதுசு என்பதால் இவள் தடுமாறுகிறாள். அதனால், ஆட்டோவில் தினமும் ஆபிஸிற்கு செல்கிறாள். ஆட்டோவில் தான் செல்வாயா என பையனுடைய அக்கா, இவளுக்கு போன் போட்டு சண்டை போடுகிறாள். இப்படியாக எது செய்தாலும் பையனுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் யாராவது ஒருவர் இவளை குறை கூறுகிறார்கள். ஒரு நாள் தன்னுடைய மகளை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல பெங்களூரில் உள்ள மகள் வீட்டுக்கு செல்ல, தன் வீட்டுக்கு வர பெர்மிஷன் இல்லாமல் எப்படி வர முடியும் என்று கூறி பையன் ரம்யாவோடு சண்டை போடுகிறான். பெண்ணுடைய அப்பாவும், பையனிடம் மன்னிப்பு கேட்க அவனும் மாமனாரை இரண்டு நாட்கள் தன்னுடைய வீட்டில் தங்க அனுமதிக்கிறான். 2 மாதங்கள் அந்த வீட்டில் கணவன் மனைவி ஒரே வீட்டில் இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் இடையே எந்தவித தாம்பத்ய உறவும் இல்லை. இதை பற்றி கணவனிடம் கேட்டாலும், எதுக்காக அலையுற? என்று கேட்டு ரம்யாவிடம் வார்த்தைகளை விடுகிறான். அதன் பின்பு, அவன் பக்கத்திலேயே அவளால் செல்லமுடியவில்லை.
சில நாட்கள் கழித்து, பையனுடைய அம்மா பெங்களூருக்கு வந்து அவர்கள் தனியாக படுத்திருப்பதை கேள்வி கேட்கிறாள். கணவன் செய்ததை ரம்யா சொல்ல, மகனை பற்றி குறை கூறுவதாகச் சொல்லி அதற்கும் வாக்குவாதம் செய்கிறார். இது சரிபட்டு வராது மகனுக்கு டைவர்ஸ் கொடுத்துவிடு என்று மாமியார் சொல்ல, அவள் அதற்கு மறுக்கிறாள். இருப்பினும், கணவன் செய்ததை எண்ணி அவனோடு வாழ முடியாது என்று முடிவு எடுத்து சென்னையில் உள்ள அப்பா வீட்டுக்கு வந்துவிடுகிறாள். மாப்பிள்ளை தன் மகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்த பெண்ணுடைய அப்பா, இது பற்றி பையனுடைய அம்மாவிடம் பேசுகிறார். ஆனால், அந்த அம்மா பெண்ணை பற்றி தான் குறை கூறுகிறார். அதன்பின், தங்களுக்குள் எந்தவித தாம்பத்ய உறவும் இல்லை என்ற உண்மையை தனது அப்பாவிடம் சொன்ன பிறகு, இந்த சமயத்தில் தான் என்னை பார்க்க விஷயத்தை சொன்னார்கள். சேர்ந்து வாழ வேண்டும், இருந்தாலும் அடிமையாக வாழ முடியாது என்று பெண் சொல்ல, பையன் வீட்டார் டைவர்ஸ் கொடுக்க வேண்டும் என்ற முடிவோடு இருந்தார்கள்.
அதன்பின், சேர்ந்து வாழ ஒரு மனு போட்டு அவனுக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அவன் ஒரு வக்கீலை வைத்து பெண்ணுக்கு குறை இருக்கிறது என்று கூறி தான் வாதாடினார்கள். யாருக்கு குறை இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள ஹாஸ்பிட்டலுக்கு அந்த பையன் செக் அப் செய்ய செல்ல மாட்டிக்கிறான். அதன் பின், தம்பதியை கவுன்சிலிங்கிற்கு அனுப்பி, மீடியேசனுக்கு அனுப்பினார்கள். அங்கு, மனைவியாக மரியாதை கொடுத்தால் சேர்ந்த வாழ தயாராக இருக்கிறேன் என்று ரம்யா கூறுகிறாள். ஆனால், அந்த பையன் சேர்ந்து வாழ மறுக்கிறான். பையனுடைய அம்மாவிடம் மீடியேட்டர் பேசியதில், அவர்கள் இருவரை சேர்ந்து வாழ வைக்க விருப்பமில்லை என்று அவருக்கு தெரியவந்தது. அதன்பின், மெயிண்டெனன்ஸுக்காக 25 லட்ச ரூபாய் பணமும், தங்களுடைய நகைகளை கொடுக்க வேண்டும் என்று பெண் வீட்டார் கூறினர். திருமணத்திற்கு பெண்ணுடைய நகைகளை கொடுக்க வேண்டும் என்றால் பெண்ணுக்கு போட்ட தாலியை கொடுக்க வேண்டும் என்று பையன் வீட்டார் கேட்க அவளும் அதற்கு சம்மதித்து அதை கழட்டி கொடுத்தாள். மெயிண்டெனன்ஸ் பணத்தை 2 வருடம் வரை அவர்கள் கொடுக்க சம்மதிக்கவில்லை. அதன் பின்னர், யாருக்கு குறை இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள மெடிக்கல் பெட்டிசனை போட்டேன். கோர்ட்டு உத்தரவு போட்டாலும் அவன் ஹாஸ்பிட்டலுக்கு செல்ல மறுத்துவிட்டான். கடைசியாக மெயிண்டெனன்ஸுக்காக அவன் 11 லட்ச ரூபாய் கொடுப்பதாக ஒப்புக்கொண்டான். அதன் பின், மீயுட்ச்சுவல் போட்டு அந்த 11 லட்சத்தை வாங்கிவிட்டு இருவருக்கும் விவகாரத்து ஆனது.