Skip to main content

ரிஷப் பந்த்திற்கு மருத்துவ பரிசோதனை - இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

rishabh pant

 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட், போட்டி தற்போது  நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனைத்தொடர்ந்து ஆடிய இந்தியா 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆஸ்திரேலியா, தனது இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

 

இதற்கிடையே, இந்திய வீரர் ரிஷப் பந்த், பேட்டிங் செய்யும்போது காயமடைந்தார். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பந்து, அவரது முழங்கையை பதம் பார்த்தது. இதனைத் தொடர்ந்து வலியால் துடித்த ரிஷப் பந்திற்கு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு பேட்டிங் செய்த அவர், 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 

இந்நிலையில், ரிஷப் பந்திற்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளதா என அறிய சோதனை செய்யப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரிஷப் பந்திற்கு மாற்று வீரராக விருத்திமான் சாஹா விக்கெட் கீப்பராக களமிறங்கியுள்ளார். ஏற்கனவே ஷமி, உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல் உள்ளிட்ட வீரர்கள் காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

தடைகளைத் தாண்டும் ரிஷப் பண்ட்; ரசிகர்கள் மகிழ்ச்சி!

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

cricketer rishabh pant instagram viral video after car incident treatment 

 

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு தற்போது உடல்நிலை தேறிவரும் நிலையில் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

 

இந்நிலையில் ரிஷப் பண்ட் வெளியிட்டுள்ள வீடியோவில், முதலில் மாடிப்படிக்கட்டில் ஏறும்போது கடும் சிரமத்திற்கு இடையில் படிக்கட்டின் கைப்பிடி உதவியுடன் ரிஷப் பண்ட் நடந்து வருகிறார். அதனைத் தொடர்ந்து தற்போது சற்று சகஜமாக நடந்து வருகிறார். அந்த வீடியோவில், 'மோசமாக இல்லை. சாதாரண விஷயங்கள் கூட சில நேரங்களில் கடினமாக இருக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதையடுத்து அவரது ரசிகர்கள் ரிஷப் முழுவதும் குணமடையவும், விரைவில் கிரிக்கெட் மைதானத்திற்கு வாருங்கள் எனவும் கமெண்ட் செய்து உற்சாகம் அளித்து வருகிறார்கள். ரிஷப் பண்ட் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

Next Story

WTC: மூன்றாம் நாள் ஆட்டம் முடிவு; முன்னிலையில் ஆஸ்திரேலியா

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

WTC: Third day's play ends; In the presence of Aussie

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

 

தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் விக்கெட்களை இழந்தாலும் ஸ்டீவென் ஸ்மித் - ட்ராவிஸ் ஹெட் கூட்டணி சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை ஏற்றினர். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 163 ரன்களையும் ஸ்டீவென் ஸ்மித் 121 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்களையும் முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்களையும் ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி தொடர் தடுமாற்றத்துடனே ஆடியது. முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 296 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அஜிங்க்யா ரஹானே 89 ரன்களையும் ஷர்துல் தாக்கூர் 51 ரன்களையும் ரவீந்திர ஜடேஜா 48 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்களையும் மிட்சல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், கேமரூன் க்ரீன் தலா 2 விக்கெட்களையும் நேதன் லயன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலை பெற்றது.

 

தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 123 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக லபுசேன் 41 ரன்களையும் ஸ்டீவென் ஸ்மித் 34 ரன்களையும் எடுத்திருந்தனர். இந்திய அணி சார்பில் ஜடேஜா 2 விக்கெட்களையும் உமேஷ் யாதவ் மற்றும் முகமது சிராஜ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். தற்போது ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.