Published on 12/09/2021 | Edited on 12/09/2021

அமெரிக்கா ஓபன் மகளிர் டென்னிஸ் பிரிவில் பட்டம் வென்றார் பிரிட்டனைச் சேர்ந்த வீராங்கனை எம்மா ராடுகானு. இறுதிப் போட்டியில் எம்மா ராடுகானு 6-4, 6-3 என்ற நேர் செட்டில் கனடாவின் லேலாவை வீழ்த்தி சாம்பியன் ஆனார். 1968- ஆம் ஆண்டுக்கு பிறகு 53 ஆண்டுகளில் அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற முதல் பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகானு. 44 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் பிரிட்டன் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
18 வயதில் அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற எம்மாவுக்கு பிரிட்டன் ராணி எலிசபெத், பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.