இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்ல உள்ள இந்திய மகளிர் அணியை நேற்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய மகளிர் அணி 3 ஒரு நாள் போட்டியிலும் 3 டி20 போட்டிகளிலும் விளையாட உள்ளது. டி 20 போட்டிகள் முறையே செப்டம்பர் 10, 13, 15 ஆகிய தேதிகளிலும் ஒரு நாள் போட்டிகள் முறையே 18, 21, 24 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது. ஹர்மன்ப்ரீத் கர் கேப்டனாகவும் ஸ்மிரிதி மந்தனா துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு வேகப் பந்துவீச்சாளர் ஜூலான் கோஸ்வாமி அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்திய டி20 அணி : ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ரகர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், சினே ராணா, ரேணுகா தாக்கூர், மேக்னா சிங், ராதா யாதவ், சப்பினேனி மேகனா, தனியா சப்னா பாடிஷ்வரி (ஜி.கே.), , தயாளன் ஹேமலதா, சிம்ரன் தில் பகதூர், ரிச்சா கோஷ் (WK), கே.பி. நவ்கிரே.
இந்திய ஒருநாள் அணி : ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, சபினேனி மேகனா, தீப்தி ஷர்மா, தனியா சப்னா பாட்டியா (WK), யாஸ்திகா பாட்டியா (WK), பூஜா வஸ்த்ரகர், சினே ராணா, ரேணுகா தாக்கூர், மேக்னா சிங், ராஜேஸ்வரி கயாக், ராஜேஸ்வரி , ஹர்லீன் தியோல், தயாளன் ஹேமலதா, சிம்ரன் தில் பகதூர், ஜூலன் கோஸ்வாமி, ஜெமிமா ரோட்ரிக்ஸ்