Skip to main content

15 மாதம் கழித்து பங்காளியை பழி வாங்கியிருக்கும் இந்தியா....

Published on 20/09/2018 | Edited on 20/09/2018
pakistan


துபாயில் நேற்று நடந்த ஆசியக்கோப்பை ஏ பிரிவு லீக் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தான் அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஹாங்காங்குடன் பந்து வீசவே திணறிய இந்தியாவை நினைத்து இந்திய ரசிகர்கள் பதற்றமாக இருந்தனர். இந்திய அணியில் ஷர்துல், கலீல் நீக்கப்பட்டு பூம்ரா, ஹர்திக் சேர்க்கப்பட்டனர். பாகிஸ்தான் ஹாங்காங்குடன் ஆடிய அதே பழைய அணியுடன் களத்தை சந்தித்தது. பின்னர், ஆட்டம் தொடங்கியவுடன் புவனேஷ் குமாரின் பந்து வீச்சையும், பும்ராவின் முதல் பத்து ஓவர்களை பார்த்து இந்திய ரசிகர்கள் மெர்சலாகிவிட்டனர். பந்து வீச்சில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திவந்த இந்தியா, பாகிஸ்தானை 43.1 ஒவருக்கு 162 ரன் மட்டுமே சேர்க்க வைத்து ஆல் அவுட் செய்தது. இந்திய பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், கேதார் ஜாதவ் தலா 3, பூம்ரா 2, குல்தீப் 1 விக்கெட் வீழ்த்தினர்.

 

இதைத் தொடர்ந்து 50 ஓவர்களில் 163 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்கிற எளிய இழக்குடன் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கத்திலிருந்தே நிதானமகா ஆரம்பித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 86ரன்கள் சேர்த்தது. கேப்டன் ரோஹித் 52 ரன்னிலும், தவான் 46 ரன்னிலும் அவுட்டாகினர். பின்னர், வெற்றி இழக்கை 29 ஓவரில் தொட்டது இந்தியா. எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.  இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் சந்தித்து 15 மாதங்கள் இருக்கும். கடந்த வருடம் சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் மோதியது. இதில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.