Skip to main content

மேற்கிந்தியத் தீவுகள் அணியை இரண்டரை நாட்களிலேயே ஊதி தள்ளிய இந்தியா!!!

Published on 06/10/2018 | Edited on 06/10/2018
jadeja


மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி.
 

5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டி இரண்டரை நாட்களிலேயே முடிந்தது. 
 

இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை அணியை தொல்வியடைய செய்து இந்தியா வெற்றிபெற்றுள்ளது.
 

ரன் விவரம்: இந்தியா 649/9 டிக்லேர், மேற்கிந்தியத் தீவுகள் 181 & 196. 

Next Story

உலகக் கோப்பை கிரிக்கெட்; வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி 4வது வெற்றி

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

India's 4th win after defeating Bangladesh at World Cup cricket

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.

 

அந்த வகையில், மகாராஸ்டிரா மாநிலத்தில் உள்ள மைதானத்தில் நேற்று (19-10-23) இந்தியா - பங்களாதேஷ் அணிகள் உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் மோதின. இந்தப் போட்டியில் பங்களதேஷ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ்  அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 256 ரன்களை எடுத்திருந்தது. பங்களாதேஷ் அணியில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 66 ரன்களையும், டான்ஷித் ஹசான் 51ரன்களையும் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணிக்கு 257 ரன்களை இலக்காக பங்களாதேஷ் அணி நிர்ணயித்தது. இந்த போட்டியில், இந்திய அணியின் வீரரான பும்ரா, சிராஜ் மற்றும் ரவீந்தர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், தாகூர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைம் எடுத்தனர்.

 

இதனைத் தொடர்ந்து, 257 ரன்களை எடுத்தால் என்ற இலக்குடன் இந்திய அணி மைதானத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்த போட்டியில் விளையாடிய, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 40 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடித்து 48 ரன்களை குவித்து அவுட்டானார். அதன் பின் களமிறங்கிய  சுப்மன் கில் 55 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடித்து 55 ரன்களை குவித்து அவுட்டானார். அதன் பின், விளையாடிய விராட் கோலி 97 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் அடித்து 103 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

 

இறுதியில், இந்திய அணி 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 261 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. பங்களாதேஷ் அணியை வீழ்த்தியதன் மூலம் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இந்திய அணி இரண்டவது இடத்தில் நீடிக்கிறது. 

 

 

Next Story

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதித்த பார்வை மாற்றுத்திறனாளி இந்திய பெண்கள் அணி

Published on 27/08/2023 | Edited on 27/08/2023

 

India's visually impaired women's team beat Australia

 

சர்வதேச பார்வை மாற்றுத்திறனாளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், இங்கிலாந்து பர்மிங்காமி உலக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுவருகிறது. இதில், இந்த ஆண்டு முதல்முறையாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டது. இதில், இந்திய பெண்கள் அணி பங்கேற்று இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.  

 

20 ஓவர் கொண்ட இந்த கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி, ஆஸ்திரேலியா பெண்கள் அணி மோதின. இந்த இறுதி போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களுக்கு எட்டு விக்கெட்களை இழந்து 114 ரன்கள் எடுத்தது. இரண்டாம் இன்னிங்ஸ் துவங்குவதற்கு முன் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சற்று தாமதமாக துவங்கப்பட்டது. பிறகு மழையின் காரணமாக மாற்றியமைக்கப்பட்ட 42 ரன்கள் இலக்கை இந்திய அணி எதிர்கொண்டது. 

 

இதில் இந்திய அணி, 3.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இந்திய பெண்கள் அணிக்கு தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். 

 

பிரதமர் நரேந்திர மோடி, தங்கம் வென்ற பார்வை மாற்றுத்திறனாளி பெண்கள் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐ.பி.எஸ்.ஏ. உலக விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் பார்வை மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணிக்கு பாராட்டுகள். நமது விளையாட்டு, பெண்களின் அசைக்க முடியாத மனப்பான்மையையும் திறமையையும் எடுத்துக்காட்டும் ஒரு மகத்தான சாதனை. இந்தியா பெருமை கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.