Skip to main content

23 வயதில் எல்லாராலும் "பெரியவர்" என அழைக்கப்பட்ட லெனின்

Published on 04/02/2019 | Edited on 09/02/2019

விளாடிமிர் லெனின் 22 ஏப்ரல் 1870ல் ரஷ்யாவில் வால்கா நதியின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் இல்யா உல்யனாவ் - மாயா உல்யானவ் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலீச் உல்யானவ் என்பதாகும். அலெக்ஸாண்டர், டிமிட்ரி என்ற சகோதரர்களும், ஆனர்,மாணவப் பருவத்திலேயே மிகுந்த திறமைசாலியாய் விளங்கியவர் லெனின். 1887-ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்தபோது, லெனினது சான்றிதழில் தலைமையாசிரியர் பின்வருமாறு எழுதியிருந்தார்:

 

lenin

 

மிகவும் திறமையானவர், கடின உழைப்பாளி, விடா முயற்சி கொண்டவர், எல்லா வகுப்புகளிலும் படிப்பில் சிறந்து விளங்கியவர், முன்னேற்றம், , வளர்ச்சி ஆகியவற்றில் முதன்மையானவர் என்பதற்காகப் பள்ளிப் படிப்பை முடிக்கும் இந்த நேரத்தில் அவருக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது.''ரஷ்ய மக்களை கடும் துன்பதுயரத் துக்குள்ளாக்கி வந்த ஜார் மன்னன் 3-ஆம் அலெக்சாண்டரை வன்முறையின் மூலம் ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்தும் கண்ணோட்டம் கொண்ட வர்கள், அப்போது ரஷ்யாவில் இருந்தனர். மூன்றாம் அலெக்சாண்டரைக் கொலை செய்வதற்கான சதியில் லெனினது அண்ணன் அலெக்சாண்டர் ஈடுபட்டிருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு, கைதுசெய்யப்பட்டு தூக்கில் இடப்பட்ட  சேதி வந்தபோது, லெனின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் மாணவராய் இருந்தார். அப்போது அவர் இறுதித் தேர்வு எழுதிக்கொண்டிருந்தார்.அண்ணனை பெரிதும் நேசித்தார், லெனின். அவரை மதித்தார். ரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அண்ணன், தனது புரட்சிகர நடவடிக்கைகளைப்பற்றி குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசியதில்லை. எனினும் சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளை அவருடன் பலமுறை விவாதித்துள்ளார், மாணவர் லெனின்.அண்ணன் தூக்கிலிடப்பட்டது கண்டு லெனினுக்கு அதிர்ச்சிதான். அண்ணனின் துணிச்சலுக்குத் தலைவணங் கினார். எனினும் தனது எதிர்கால நடவடிக்கை குறித்தும் அவர் ஒரு முடிவுக்கு அப்போதே வந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் லெனினது தங்கை இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கும் போது, ""அண்ணன் காட்டிய பாதையில்  நாம் போகமாட்டோம். நாம் பின்பற்ற வேண்டிய பாதை அதுவல்ல'' என்றாராம்.


வெற்றி தரும் என்று லெனின் நம்பிய பாதையில் தீவிரமாக செயல்பட்டார். உண்மையில் அவர் வெற்றி பெற்றார் என லெனின் தங்கை எழுதியுள்ளார்.1887-இல் புரட்சிகரப் போராட்டம் ஒன்றில் கலந்து கொண்ட தற்காக சிறையில் அடைக்கப்பட்டதுடன் அப்போதைக்கு அவரது பல்கலைக் கழகப் படிப்பு முடிந்து போயிற்று. சிறை நண்பர்கள் "எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம்?' என்று தங்களுக்குத் தாங்களே கேள்வி எழுப்பிக் கொண்டனர். ""செல்லவேண்டிய பாதையை அண்ணன் காட்டிவிட்டார்'' என்றார் லெனின்.தனது பாதை எது என்று திட்டவட்டமாக முடிவு செய்தார் இளம் லெனின். அது, அவரது அண்ணனும் அவருக்கு முன்பிருந்த புரட்சியாளர்களும் கடைபிடித்த பாதையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.புதிய கோணத்தில் சிந்தித்தார் லெனின். 1890-ஆம் ஆண்டு சட்டம் பயில அனுமதிக்கப்பட்ட லெனின் வீட்டில் இருந்தபடி 18 மாதங்களில் படித்து சிறப்பாக தேர்ச்சி பெற்றார்.

893-இல் குடியானவர் வாழ்க்கையில் புதிய பொருளாதார வளர்ச்சி என்ற கட்டுரை எழுதினார். லெனின் எழுதி, அழிந்து போகாமல் கிடைத்த முதலாவது கட்டுரையாக அது கருதப்படுகிறது.சமாரா நகரில் கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழி பெயர்த்தார். அது கிட்டாமல் போன மொழிபெயர்ப்பாகும். அங்கிருந்த மார்க்சியவாதிகள் மத்தியில் லெனின் புகழ் பெற்றார். ""இந்த 23 வயது இளைஞரிடம் எளிமை, சமயோசிதம், வாழ்க்கையின் மீது ஆர்வம், வியப்பேற்படுத்தும் அளவுக்குப் பெருந்தன்மை, ஆழமான அறிவாற்றல், முரணற்ற கூர்மையான தர்க்க ஞானம், தெளிவான கணிப்பு, துல்லியமான விளக்கங்கள் ஆகியன இருந்தன'' என்று அங்கிருந்த மார்க்சிய குழு உறுப்பினர் ஐ.கே. லலாயந்த்ஸ் பிற்காலத்தில் நினைவு கூர்ந்தார்.23 வயதில் எல்லாராலும் "பெரியவர்' என்றே லெனின் அழைக்கப்பட்டார்.தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்டக் கழகத்தை முதலில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஏற்படுத்தி நாடு முழுவதும் பரவச் செய்தார் லெனின்.மார்க்சிய பிரச்சாரத்தை ரகசியமாக செய்து வந்தார். அவரைத் தொடர்ந்து கண்காணித்து வந்த போலிகள் கைது செய்தனர்.  மூன்றாண்டுகள் நாடு கடத்தப்பட்டு சைபீரிய பனிப்பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டார் லெனின்.பின்னர் மார்க்சிய தத்துவ வழியில் ஓர் அரசியல் கட்சி அமைக்கத் திட்டமிட்டார். இதற்காக ரகசிய  "அரசியல்' இதழை ஆரம்பிக்கவும் முயற்சி செய்தார்.


அரசியல் பத்திரிகையானது ஒரு பரப்புரையாளராகவும், கிளர்ச்சியாளராகவும், அமைப்பாளராகவும் இருக்க வேண்டும் என்றார் லெனின். அத்தகைய ஒரு பத்திரிகை தொடங்கப்பட்டால் நாட்டையே வசப்படுத்திவிட முடியும் என்று நம்பினார்.1900- ஆவது ஆண்டு டிசம்பரில் தீப்பொறி (இஸ்க்ரா)  என்ற பெயரில் ஓர் இதழைத் தொடங்கினார். முதல் இதழில் லெனின் பின் வருமாறு எழுதினார்:  ""வல்லமை மிக்க எதிரியின் கோட்டை நம் கண்முன்னே உயர்ந்தோங்கி நிற்கிறது. நம்மீது வெடிகளையும் குண்டுகளையும் பொழிந்து, நம் சிறந்த போராட்ட வீரர்களை வீழ்த்தி வருகிறது. இந்தக் கோட்டையை நாம் பிடித்தாக வேண்டும். ரஷ்ய புரட்சிக்காரர்களின் சக்தி முழுவதுடனும் விழிப்புணர்ச்சி பெற்றுவரும் பாட்டாளி வர்க்க சக்தி முழுவதையும் ஒன்றுசேர்த்து ரஷ்யாவின் உயிர் துடிப்பாகவும், ரஷ்யாவின் நேர்மையாகவும் இருக்கக்கூடிய, அனைத்து சக்திகளையும் தன்னகத்தே ஈர்க்கக்கூடிய கட்சி ஒன்றை அமைத்தால், இக்கோட்டையை நாம் பிடித்து விடுவோம்.''  என்று எழுதினார்.1877-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில்  அலெக்சியேவ் கூறிய வாசகங்களையும் அதில் சேர்த்து எழுதியிருந்தார்: ""கோடிக்கணக்கான உழைப்பாளர்களின் வலு வேறிய கரம் மேலுயர்ந்து படைவீரர்களின் துப்பாக்கிகள் காவல்காத்து நிற்கும் கொடுங்கோன்மை தளையைத் தகர்த்தெறியும்.''லெனின் பாட்டாளி வர்க்க கட்சியை போல்விஷ்க் கம்யூ னிஸ்ட் கட்சியை உருவாக்கினார். விவசாயிகள், தொழிலாளர் கள், படைவீரர்களின் ஒருங்கிணைப்பாக கட்சி திகழ்ந்தது.  அவர்களுக்குப் புரட்சிகர வழிகாட்டினார். சிக்கலான எல்லாத் தருணங்களிலும் புரட்சிகரமான வழிகாட்டலைத் தந்தார். பல ஆண்டுகாலம் வெளிநாடுகளில் தங்கியிருந்தபடியும் தலைமறை வாக ரஷ்யாவுக்குள் மக்களை திரட்டியும் செம்படையை உருவாக்கி வழிகாட்டியும் ரஷ்ய மக்களின் புரட்சித்தலைவராய் உயர்ந்தார். புரட்சிக்கான உத்திகளை வகுப்பதில் வல்லவராய்த் திகழ்ந்தார்."உண்மையான எல்லா புரட்சிகர சக்திகளையும் புரட்சிகரமான வகையில் ஏற்கெனவே போராடிவருகிற எல்லா சக்திகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் லெனின் பாட்டாளிகளும் விவசாயிகளும் ஒன்று சேராமல் சமூக ஜனநாயகவாதிகளும், புரட்சிகர ஜனநாயக வாதிகளும் ஒன்றுசேர்ந்து ஒரு போராட்ட முன்னணியை உருவாக்காமல் மாபெரும் ரஷ்யப் புரட்சி முழுமையான வெற்றி பெறாது'' என்றார் லெனின்.1905-ஆம் ஆண்டில் நடைபெற்ற புரட்சியின் சூழ்நிலைமைகளில், நாடுதழுவிய ஆயுதமேந்திய வெகுமக்கள் கிளர்ச்சி ஒன்றுதான் ஜார் ஆட்சியைத் தூக்கி எறிந்து, ஜாரின் அதிகார வர்க்க போலீஸ் எந்திரத்தையும் உடைத்தெரியும் என்று லெனின் திட்டவட்டமாகத் தெரிவித்தார். நாட்டின் சூழ்நிலை களை நன்கு அலசி ஆராய்ந்து வெகுஜன அரசியல் வேலை நிறுத்தம், அரசியல் ஆர்ப்பாட்டம் போன்ற போராட்ட வடிவங்களின் தேவையை வலியுறுத்தி வேலை நிறுத்தத்திற்கும் ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கும் இடையிலான தொடர்பை தெளிவாக எடுத்துக் காட்டினார்.

 

lenin speech



ரஷ்ய அரசின் கெடுபிடி காரணமாக தலைமறைவாக வெளிநாடுகளில் வாழ்ந்து 1905-க்குப்பின் தாயகம் திரும்பிய லெனின் 1907 முதல் 1917- ஆம் ஆண்டு புரட்சி நடைபெறத் தொடங்கிய 10 ஆண்டுகள் வெளிநாடுகளில் இருந்தபடி ரஷ்யமக்களுக்கு வழிகாட்டினார்.தோல்வியடைந்த 1905-ஆம் ஆண்டின் முதல் ரஷ்யப் புரட்சியே 1917-ஆம் ஆண்டில் நடைபெற்ற அக்டோபர் புரட்சிக்கு ஒத்திகையாக அமைந்தது என்று லெனின் பிற்காலத்தில் கூறினார்.வெளிநாட்டில் முதல் முறையாக லெனின் சீர்திருத்த இளம் ஹங்கேரியத் தொழிலாளி பால் பெத்ரோவ்ஸ்கி லெனினைப் பற்றி சுவையாகக் கூறுகிறார்:"முதல் முறையாக 1908-ஆம் ஆண்டு லெனினைப் பார்த்தேன். ரஷ்யாவிலிருந்து வெளியேறி வந்தவர்கள் அமைத்துக் கொண்ட அந்தக் கிளப்பில் சுமார் 30 பேர் இருந்தனர். பெரும்பாலோர் தொழிலாளர்கள். அனைவரும் ஒரு மேஜையைச் சுற்றி அமர்ந்து எளிய உடை அணிந்திருந்த சிவப்புத்  தாடிக்காரர் ஒருவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர். ""அவர்தான் விளாதிமீர் இலியிச் லெனின்'' என்று என்னிடம் சொன்னார்கள்.அவரை இதற்குமுன் நான் பார்த்ததில்லை. பார்த்ததும் கவரும் விதத்தில் அவரது தோற்றத்தில் எதுவுமில்லை. அவருடைய உடையும் குறுந்தாடியும் ஃப்ரெஞ்ச் தொழிலாளர் களிடம் காணப்பட்டது போலவே இருந்தது. ஒரு தொழிற் சாலையிலோ, அல்லது வீதியிலோ அவர் எவருடைய கவனத் தையும் கவர்ந்திருக்க மாட்டார். ஆனால் ரஷ்யாவிலிருந்து இங்கே வந்து குடியேறியவர்களிடையே லெனின் ஒரு தலைவர் என்பது பளிச்சென தெரிந்தது. எல்லாரும் அவரிடம்தான் கேள்விகளைக் கேட்டனர். கடினமான பிரச்சினைகளுக்கு அவரிடமிருந்துதான் ஒவ்வொருவரும் ஒரு தீர்வை எதிர்பார்த்தனர். அவரும் விளக்கமாக கூறினார். அனைவரின் கவனமும் அவர்மீது பதிந்திருந்தது. அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக அவர் இருந்தார். அவரைச் சுற்றி இருந்தவர்கள் பெரும் அன்புடனும் மரியாதையுடனும் அவரிடம் பழகுவதிலிருந்து இது நன்கு தெரிந்தது.'' என்று பால்பெத்ரோவ்ஸ்கி  எழுதினார்.
புரட்சியின் இறுதி வெற்றியில் அசைக்க முடியாத நம்பிக்கை, இதனுடன் கூடவே இந்த வெற்றிக்காக மேற்கொள்ளப்படும் தளராத முயற்சிகள், அரசியல் எதார்த்த கண்ணோட்டம், நன்னம்பிக்கை ஆகிய இவை யாவும் லெனினது சிறப்புத் தன்மைகள் ஆகும்.லெனினது முயற்சியில் சட்டப்பூர்வ ஏடாக "பிராவ்தா' (உண்மை) 1912-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.1914-ஆம் ஆண்டு முதல் உலகப் போர் வெடித்தது. உலகத்தை மறுகூறுபோட ஏகாதிபத்திய கொள்ளைக் காரர்களுக்கிடையே யுத்தம் வெடிக்கப் போகிறது என்று லெனின் முன்னதாக எச்சரித்திருந்தார்.ஏகாதிபத்திய யுத்தத்தை ஏகாதிபத்திய அரசுகளுக்கு எதிரான உள்நாட்டுப்போராக மாற்ற வேண்டும் என்று ஒரு முழக்கத்தை முன்வைத்தார் லெனின்.யுத்தப் பின்னணியில் "சோஷல் டெமாக்கிரேட்' என்ற  பத்திரிகையைத் தொடங்கினார் லெனின்.


ஒரே ஒரு நாட்டிலும் சோஷலிசம் வெற்றி பெற முடியும் என்று லெனின் கணித்துச் சொன்னது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாதான்  ஏகாதிபத்திய சங்கிலியில் பலவீனமான கண்ணி என்பதை எடுத்துக்கூறினார். 1917, பிப்ரவரியில் நடந்த முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி ஜாராட்சியைத் தூக்கி எறிந்தது.இது அக்டோபர் ஷோலிசப் புரட்சிக்கு முன் னோடியானது. லெனினது தீர்க்க தரிசனம் வியப்பேற்படுத்தக் கூடியது.1917, ஏப்ரல் 16 அன்று பெத்ரோகிராட் ரயில் நிலையத்தில் வந்திறங்கினார் லெனின். அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் பேசிய லெனின் சோஷலிசப் புரட்சி நீடுழி வாழ்க! என்று கூறி பேச்சை முடித்தார்.1917, செப்டம்பர் மாத மத்தியில் ஆயுதமேந்திய கிளர்ச்சி நடத்த தயாரிப்பு பணியில் ஈடுபடுமாறு லெனின் கூறினார். அவர் எடுக்கும் முடிவுகள் எவ்வளவு மகத்தான பொறுப்பு வாய்ந்தவை என்பதை நன்கு உணர்ந்திருந்தார்.

1917, அக்டோபர் 26 (புதிய காலண்டர்படி நவம்பர் 7) அன்று ரஷ்ய புரட்சி வெற்றி பெற்றது. முன்னதாக நவம்பர் 6-ஆம் நாள் தலைமறைவாக இருந்தபடி கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில் உடனடியாக ஆயுதமேந்திய புரட்சியை நடத்த ஆணையிட்டார் லெனின்."இன்று மாலையோ, இன்று இரவோ அரசாங்கத்தை கைப் பற்றியாக வேண்டும். அதற்குமுன் ராணுவ பயிற்சி அதிகாரிகளை நிராயுதபாணியாக்க வேண்டும்.  (அவர்கள் எதிர்த்தால் முறியடிக்க வேண்டும்)காலம் தாழ்த்தக்கூடாது!  இல்லையேல் எல்லாவற்றையும் இழந்துவிடுவோம்!அரசாங்கம் கலகலத்துப் போயிருக்கிறது. எப்படியேனும் அதற்கு மரண அடி கொடுத்தாக வேண்டும்.செயலில் இறங்க தாமதிப்பது சர்வ நாசத்தில் முடியும்'' என்றார் லெனின்.புரட்சியின் தலைமையகமாக இருந்த ஸ்மோங்னிக்கு வந்து சேர்ந்த லெனின் ஆயுதப் போராட்டத்திற்கு நேரடியாக வழிகாட்டும் பணியை மேற்கொண்டார்.மாரிக்கால அரண்மனைமீது இறுதிப் போர் தொடுப்பதற்கான சமிக்ஞையாக இரவு 9. 40 மணிக்கு அரோரா போர்க்கப்பல் வெற்று பீரங்கிக் குண்டை சுட்டது. அரண்மனையில் கடும் சண்டை. அதிகாலை 2 மணிக்கு அரண்மனை கைப்பற்றப்பட்டது. இடைக்கால அரசின் அமைச்சர்கள் கைது செய்யப் பட்டார்கள்.இடைக்கால அரசு தூக்கியெறியப்பட்டது.நவம்பர் 8-ஆம் நாள் சமாதானம் மற்றும் நிலம் பற்றிய அரசாணைகளை லெனின் வெளியிட்டார். உலக வரலாற்றில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்த சோஷலிசப் புரட்சியின் நாயகனாக லெனின், தன் வரலாறு தன்மீது சுமத்திய கடமையை நிறைவேற்றினார். மக்களை நேசிக்கும் நேர்மையான தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நேரடி உதாரணமாக லெனின் திகழ்கிறார். சிக்கலான தருணங்களில் எவ்வாறு முடிவெடுக்க வேண்டும் என்பதை அவரது போராட்ட உத்தியிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.மாபெரும் மனிதாபிமானியாக, அதே சமயம் எளிமையான, பகட்டு ஆரவாரம் இல்லாத மனிதராக லெனின் வாழ்ந்து காட்டினார்!லெனினது வாழ்க்கையிலிருந்து நாம் எத்தனையோ தலைமைப் பண்புகளை பயிலமுடியும்!

Next Story

"அதிமுகவுக்கு துணிவு இருக்கா... ஜெயலலிதாவை வாரிசு இல்லை என்று சொல்வதற்கு..." - கோவி. லெனின் கேள்வி

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

ிு

 

தமிழக அமைச்சரானதும் உதயநிதி தொடர்பான செய்திகள் ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் அமைச்சராவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று அதிமுகவின் தலைவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், இதுதொடர்பாக மூத்த ஊடகவியலாளர் கோவி.லெனின் அவர்களிடம் கேட்டபோது, "உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு முன்பு இவர்கள் தலைவியாகச் சொல்கிறார்களே, அந்த ஜெயலலிதாவுக்கு அதிமுகவில் பதவி வாங்குவதற்கு என்ன தகுதி இருந்தது என்பதை முதலில் பார்க்க வேண்டும். 

 

திமுகவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 1972 இல் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது ஜெயலலிதா கட்சியிலிருந்தாரா? இல்லை. அவர் ஆட்சியிலிருந்த 1977,1980 என இரண்டு முறையும் அவர் கட்சியில் உறுப்பினராகக் கூட இல்லையே, 81 இல் அதிமுகவுக்கு வருகிறார். 84 ஆம் ஆண்டுக்குள் கட்சியில் அனைத்து விதமான முக்கியப் பொறுப்புக்களிலும் நியமிக்கப்படுகிறார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக டெல்லிக்குச் செல்கிறார். இந்த மூன்று வருடங்களில் அரசியல் அனுபவங்கள் அனைத்தையும் கற்றுணர்ந்த ஞானியாக அவர் வந்துவிட்டாரா? இந்த இடைப்பட்ட காலங்களில் அவருக்கு என்ன தகுதி வந்துவிட்டது என்று அதிமுக தலைவர்கள் சொல்வார்களா? அதைக்கூட விட்டுவிடலாம். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு யார் முதல்வராகப் பொறுப்பேற்றது. ஜானகி அம்மையார்தானே. அவர் எம்ஜிஆர் மறைவுக்கு முன்பு என்ன பொறுப்புக்களில் இருந்தார். ஏதாவது கட்சியின் முக்கியப் பொறுப்புக்களிலோ அல்லது அமைச்சரவையில் அமைச்சராகவோ அவர் இருந்தாரா? அப்புறம் எப்படி அவர் முதலமைச்சர் ஆக்கப்பட்டார்.

 

இது எல்லாம் வாரிசு அரசியலில் சேராதா? எம்ஜிஆர் மறைந்த பிறகு தானும் உடன்கட்டை ஏறலாம் என்று நினைத்தேன் என்று ஜெயலலிதா கூறினாரே? அதை இல்லை என்று எடப்பாடி சொல்வாரா? அதிமுகவின் வரலாற்றை இப்படி வைத்துக்கொண்டு திமுகவில் வாரிசு அரசியல் என்று எடப்பாடிக்குச் சொல்ல எவ்வித தார்மீக தகுதியும் இல்லை. உதயநிதி தற்போது ஒரு புதிய பொறுப்புக்கு வந்துள்ளார். அவர் துறை ரீதியாக ஏதாவது ஒரு குற்றச்சாட்டு இருந்தால் அதை விமர்சனம் செய்யுங்கள். அது எதிர்க்கட்சியாக ஆரோக்கியமான போக்கு. அதை விட்டுவிட்டுத் தனிப்பட்ட திமுக வெறுப்பின் காரணமாக அவரை விமர்சனம் செய்வது எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்றார். 

 

 

Next Story

"நைட்டு மழை வந்தா காலையில தண்ணிய காணோம்; நடுராத்திரியில் விழுந்த மரம் காலையில் இருப்பதில்லை; இதை பாஜகவால் தாங்க முடியவில்லை..." - கோவி. லெனின் பேட்டி

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

xf

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக முதல்வரின் திராவிட மாடல் ஆட்சி தொடர்பாக சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். முத்தமிழ் அறிஞர் மகனான ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய ஆட்சியைத் திராவிட மாடல் என்று சொல்லுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும், அதற்கு வேறு தமிழ்ப் பெயரைக் கொண்டு அழைக்கலாம் அல்லவா என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுதொடர்பான கேள்வியைத் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த கோவி. லெனின் அவர்களிடம் முன்வைத்தோம். 

 

அதில் பேசிய அவர், " தமிழிசை அவர்கள் தற்போது என்னவாக இருக்கிறார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர். இதற்கு முன்பு முதலில் என்ன பதவியில் அமர்த்தப்பட்டார். தெலுங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆளுநராக உள்ள தமிழிசை தன் பெயருக்கு முன்னாள் என்ன போடுகிறார். டாக்டர் தமிழிசை என்று போடுகிறாரா? இல்லை மருத்துவர் தமிழிசை என்று போடுகிறாரா என்று பார்க்க வேண்டும். டாக்டர் என்ற வார்த்தை தமிழா? இவர்களுக்குத் திராவிட மாடல் ஆட்சியைக் குறை சொல்ல முடியவில்லை. அதனால் வேறு எந்த வகையில் இதைக் குறை சொல்லலாம் என்று பார்க்கிறார்கள். இதே மாதிரியான உப்பு சப்பில்லாத விஷயங்களை முன்வைத்துப் பேசுகிறார்கள். 

 

திராவிட மாடல் என்று ஏன் சொல்ல வேண்டும், அதுவும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன் இவ்வாறு சொல்லலாமா என்று தமிழிசை அக்கா கேட்கிறார்கள். இவர்கள் வாயைத் திறந்தால் குஜராத் மாடல் என்கிறார்களே, அதனைக் குஜராத்தி மொழியில் சொல்லலாமே? இதைத் தமிழிசை அக்காவுக்குத் தெரியாது. அவரது கவனத்துக்கு வராமல் போய்விட்டதா? இவர்களுக்கு எதுவும் கவலை இல்லை. புயல் மழை எது வந்தாலும் இந்த திராவிட மாடல் ஆட்சி சமாளித்து ஆட்சி நடத்துகிறது. நைட்டு மழை வந்தா காலையில தண்ணிய காணோம். நடுராத்திரியில் விழுந்த மரம் காலையில் இருப்பதில்லை., இதை பாஜகவால் தாங்க முடியவில்லை. எனவே இவர்கள் அது சரியில்லை இது சரியில்லை என்று அவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்" என்றார்.