பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகள் குறித்து ஹோமியோபதி டாக்டர் தீபா அருளாளன் விளக்குகிறார்
கர்ப்பப்பையில் கட்டி ஏற்படும் பிரச்சனை பல பெண்களுக்கு இருக்கிறது. 20 வயது முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாக ஏற்படுகிறது. இந்த கட்டி குறித்து பெண்கள் பரிசோதனை செய்து நோயின் தன்மை மற்றும் தீவிரம் குறித்து உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியம். இது கேன்சருக்கு இட்டுச்செல்லும் வாய்ப்புகளும் இருக்கின்றன. ஒரு காலத்தில் பெண்களுக்கு வீட்டு வேலையால் ஏற்படும் பளு அதிகமாக இருக்கும். இப்போது பெண்களுக்கு மன அழுத்தம் தான் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
வாழ்க்கை முறை மாற்றங்களினாலும் இந்த கட்டி ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகமாக நாம் உண்ணும் துரித உணவுகள் கூட இதுபோன்ற கட்டிகளை உண்டாக்கும். இன்று கடைகளில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்பதே இல்லை. ஒரே எண்ணெய் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. அந்தக் காலத்தில் நாம் சாப்பிட்ட சோளம் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கியது. இப்போது விற்கப்படும் சோளம் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய வகையில் இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.
ஒரு பெண் 10 வயதிலேயே வயதுக்கு வரும் நிகழ்வுகள் இப்போது அதிகம் நடக்கின்றன. இப்போது அனைவருக்குமே மன அழுத்தம் என்பது இருக்கிறது. மனதில் அமைதி இல்லாததால் ஹார்மோனில் பிரச்சனை ஏற்பட்டு கட்டிகள் உருவாகின்றன. அதிகமான ரத்தக்கசிவு ஏற்படுவது தான் இந்த கட்டிகளுக்கான முக்கியமான அறிகுறி. அடிவயிற்றில் கடுமையான வலி இருக்கும். இந்த காலத்தில் கணவன் மனைவி உறவு வைத்துக்கொள்வது கடினமாக இருக்கும்.
வலி தாங்க முடியாமல் கர்ப்பப்பையையே எடுத்து விடலாம் என்று நிறைய பெண்கள் சொன்ன நிகழ்வுகளும் நடந்திருக்கிறது. நவீன ஆங்கில மருத்துவம் மட்டுமல்லாமல் ஹோமியோபதி என்கிற மருத்துவ முறையும் இருக்கிறது என்கிற புரிதல் மக்களுக்கு வேண்டும். ஹோமியோபதி மருந்துகள் மூலம் குறைந்த காலத்தில் இந்த கட்டிகளை குணப்படுத்த முடியும். மருந்துகளோடு சேர்த்து சில உணவு நடைமுறைகளையும் நாங்கள் பரிந்துரைப்போம். இதனால் எந்த தவறான பின்விளைவுகளும் ஏற்படாது. இந்த எளிமையான தீர்வு பல வருடங்களாக நடைமுறையில் இருக்கிறது.