ஸ்மார்ட்போன்களுடன் திரியும் இக்கால இளைஞர்களை கவர்வதற்காக பல்வேறு நிறுவனங்களும் பல ஆராய்ச்சிகளை செய்து புதிது புதிதான தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் தற்போது வைரலாகி வருகிறது சாவ் என்ற ஒரு செயலி.
சீன நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள இந்த செயலி மூலம் நீங்கள் உங்கள் போனில் பார்க்கும் எந்த ஒரு படத்தின் ஹீரோவின் முகத்திற்கும் பதிலாக அந்த இடத்தில் உங்கள் முகத்தை பொருத்திக்கொள்ள முடியும். உதாரணமாக ஒரு சூப்பர் ஹீரோ படம் பார்க்கிறீர்கள் என்றால் அதன் ஹீரோ முகத்திற்கு பதிலாக உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து அந்த இடத்தில் வைத்துக்கொள்ளலாம். பிறகு அந்த படம் முழுவதும் ஹீரோவின் முகத்திற்கு பதிலாக உங்கள் முகமே வரும். துல்லியமான அசைவுகள், முகபாவனைகள் என அந்த படத்தில் நீங்கள் நடித்தது போலவே தோன்றும்.
இதற்காக சில வகை முக அசைவுகள், உதட்டு அசைவுகள், சில போட்டோக்களை நீங்கள் பதிவேற்றினால் போதும் அதற்குப் பின் செயலி அதை தானாகவே பொருத்தி கொள்கிறது. இந்த செயலி கடந்த சில நாட்களாக இணையத்தில் பிரபலமாகி வருகிறது. ஆனால் இது பாதுகாப்பற்ற ஒரு செயலி என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
போட்டோஷாப் மூலமே பலரது படங்கள் மார்பிங் செய்யப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தத்ரூபமான வீடியோவையே போலியாக உருவாக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டால் நாம் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் நமது புகைப்படம், நமது முக ஆசைவுகள் ஆகியவை ஒரு தனியார் நிறுவனத்தால் பதிவு செய்யப்படுவது நமக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.
Here’s for Asian representation in Hollywood ? #ZAO #AI #Deepfake pic.twitter.com/qrSs3VajfL
— Allan Xia (@AllanXia) September 1, 2019