Published on 27/03/2020 | Edited on 27/03/2020
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் 190 நாடுகளின் இயல்பு நிலையை பாதித்துள்ளது. இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பிரபலங்கள் மற்றும் முக்கிய தலைவர்களையும் கரோனா விட்டுவைக்கவில்லை.

ஏற்கனவே பிரிட்டன் இளவரசர் சார்லஸ்க்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்பொழுது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அவரே வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார்.