
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியிடம் ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுவை பெற்று உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவிட்டார். அந்த வகையில், ஒரு சிலர் தங்களின் பிள்ளைகளுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை மனு கொடுத்த போது, அவர்களிடம் மனுக்களை பெற்ற கொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி, தகுதியுள்ளவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் இல்லம் தேடி வரும் என்றார்.

இதனைத் தொடர்ந்து கட்சியினர் மத்தியில் பேசிய அவர், “வரும் 2026ம் தேர்தல் திமுகவிற்கு முக்கியமான தேர்தல் என்பதால் கட்சி நிர்வாகிகள் இன்றிலிருந்து தேர்தலுக்கான பணிகளை தொடங்க வேண்டும். குறிப்பாக கட்சி மூத்த நிர்வாகிகளோடு இளைஞரணியானர் இணைந்து தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்றார். அப்போது ஒரு சிலர் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடுகள் கட்ட மனு கொடுத்தால் ஒரு சில கிராம ஊராட்சிகளில் ஊராட்சி செயலர்கள் முரண்பாடு காட்டுவதாக கூறினார்கள். உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமி, கலைஞரின் பெயரால் செயல் படுத்தப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் கட்டப்படும் வீடுகளுக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் கூட தங்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடுகள் வேண்டி மனு கொடுத்தால் உடனடியாக அவர்களுக்கு வீடுகள் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியின் போது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி, பொரு ளாளர் கு.சத்தியமூர்த்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, ஆத்தூர் நடராஜன், அமைச்சரின் உதவியாளர் வத்தலகுண்டு ஹரிஹரன், கிழக்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் ஆ.நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் திண்டுக்கல் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், ரெட்டியார் சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணி, திண்டுக்கல் மாநகர பொருளாளர் மீடியாசரவணன், சட்டமன்ற உறுப்பினர் முகாம் அலுவலர் வடிவேல் முருகன் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.