உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, சீனா முதலிய நாடுகளில் கரோனாவின் தாக்கம் அதிகம் இருந்து வருகிறது. பல லட்சக்கணக்கான மக்கள் இந்த தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனைத் தடுப்பதற்காக 20க்கும் மேற்பட்ட நாடுகள் கரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் அதன் தாக்கம் உச்சக்கட்டத்தில் இருந்து வருகின்றது. வளர்ந்த நாடுகளிலும் அதன் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகின்றது. இந்நிலையில் இந்த கரோனா தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, "கரோனா நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் மருந்து பலனளித்துள்ளது, நிரூபிக்கப்பட்டுள்ளது. தீவிரமாகவும், கடுமையாகவும் பாதித்த நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் மருந்து பலன் தந்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.