உலகிலேயே அதிக நீர்வழிப் போக்குவரத்து நடைபெறும் வழித்தடம் சூயஸ் கால்வாய். இந்தக் கால்வாய் வழியாகப் பயணம் மேற்கொண்ட 400 மீட்டர் நீளமான எவர்க்ரீன் கப்பல், கடுமையான காற்று காரணமாக கடந்த 22ஆம் தேதி வழியிலேயே சிக்கிக்கொண்டது. சிக்கிக்கொண்ட கப்பலை மீட்கும் பணிகள் தொடர்ந்து 7வது நாளாக நடைபெற்று வருகிறது.
இருப்பினும் சிக்கிக்கொண்ட கப்பலை மீட்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. உலகின் கப்பல் வழி வணிகத்தில் 10 சதவீதம் சூயஸ் கால்வாய் வழியாகவே நடைபெறுகிறது. இந்தநிலையில், சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட கப்பலால், அந்த வழித்தடத்தில் வேறு எந்தப் போக்குவரத்தும் நடைபெறவில்லை. இந்நிலையில் கப்பலை மீட்கும் பணி குறித்து மாற்று வழியில் சிந்திக்குமாறு அதிகாரிகளுக்கு எகிப்து அதிபர் அப்துல் பத்தா அல் சசி தெரிவித்துள்ளார். இதற்கிடையே கப்பலை மீட்கும் கால அளவுகள் குறித்து தற்போது எதுவும் சொல்வதற்கில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.