Published on 17/04/2019 | Edited on 17/04/2019
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் விப்ரோ நிறுவனம் ரூ. 2,484 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த நிதியாண்டைவிட 38% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் விப்ரோ நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 1,803 கோடி.
அதேசமயம் அந்நிறுவனத்தின் வருமானம் ரூ. 13,824 கோடியிலிருந்து ரூ. 15,038 கோடியாக உயர்ந்துள்ளதாக விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
விப்ரோ நிறுவனம் ரூ. 10,500 கோடிகளுக்கு பங்குகளை திரும்பப் பெறப்போவதாகவும் அறிவித்துள்ளது. இந்த பங்குள் ஒவ்வொன்றும் தலா ரூ. 325 என்று வாங்கப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.