ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியுள்ள நிலையில், தாலிபன்கள் அந்தநாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளையும் கைப்பற்றி வருகின்றனர். நாட்டிலுள்ள 34 மாகாண தலைநகரங்களில் ஒன்பது மாகாணங்களை தலைநகரங்களை கைப்பற்றிருந்த தாலிபன்கள், இன்று பத்தாவதாக காஜினி மாகாணத்தை கைப்பற்றினர். கடந்த ஒரு வாரத்தில் தாலிபன்களால் கைப்பற்றப்படும் 10 வது மாகாண தலைநகரம் இதுவாகும்.
மேலும் காஜினி நகரம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து வெறும் 150 கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது. எனவே இதேவேகத்தில் முன்னேறினால் தாலிபான்கள் விரைவில் காபூலை கைப்பற்றுவார்கள் என கருதப்பட்டது. இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நாட்டில் நடைபெறும் போரால், 60 மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். பலர் ஈரான் போன்ற நாடுகளுக்கு அகதியாக செல்லத்துவங்கியுள்ளனர். 17000 பேர் காபூலில் அடைக்கலம் புகுந்துள்ளனர். அவ்வாறு அடைக்கலம் புகுந்தவர்கள் இருக்க இடமின்றியும், உணவின்றியும் தவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் போரை நிறுத்தும் போரை நிறுத்தும் முயற்சியாக, அதிகார பகிர்வு வழங்க ஆப்கான் அரசு முடிவெடுத்துள்ளது. கத்தாரில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் ஆப்கான் அரசு அதிகாரப்பகிர்வு ஒப்பந்தத்தை முன்வைத்துள்ளது.