அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற செனட் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் சார்பில் தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டது. அதன்படி அமெரிக்கா, மெக்ஸிகோ இடையே எல்லை பகுதியில் தடுப்பு சுவர் எழுப்புவதற்காக 500 கோடி அமெரிக்க டாலர்கள் வேண்டும் என கோரப்பட்டது. ஆனால் எதிர்கட்சிகள் ஆதரவு இல்லாததால் இந்த தீர்மானம் தோல்வியடைந்தது. இதனையடுத்து இதற்கான முடிவு எட்டப்படும் வரை அமெரிக்காவில் ஷட்டவுன் நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு காவல்துறை மற்றும் ரானுவம் தவிர மற்ற அனைத்து அரசாங்க துறைகளும் மூடப்படும். இதனால் அங்கு 80,000 பேர் வேலையிழக்கும் சூழல் உருவாகியுள்ளது. அப்படி இல்லையென்றால் அவர்கள் ஷட்டவுன் முடியும்வரை ஊதியமின்றி பணியாற்ற வேண்டிய நிலைமை உள்ளது. இதற்கு முன்பு பாரக் ஒபாமா அதிபராக இருந்த பொழுது 2013 ல் அங்கு ஷட்டவுன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் நாசா ஊழியர்கள், வர்த்தக துறை அதிகாரிகள், உள்துறை, நீதித்துறை, வேளாண்மை மற்றும் மாநில அரசு ஊழியர்கள் வேலையை இழப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.